அரசியல் சதுரங்கத்தில் பொறி பறக்கும் நகர்வுகள் நாளுக்கு நாள் முட்டி அலை மோதும் இவ்வேளையில், முஸ்லிம்களாகிய நமது நகர்வுகள், நமது முஸ்தீபுகள் எவ்வாறு அமைய வேண்டும்? எமது பொறுப்புக்கள் எவ்வித்தில் எதிர்வினை காட்ட வேண்டும்? ”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” எனும் பழமொழிக்கு ஒப்ப எதிர்வரும் ஜானதிபதித் தேர்தலை எவ்விதத்தில் பயன்படுத்திக் கொள்வது? எத்தகைய முடிவை எடுப்பது? போன்ற வினாக்களின் விடைகளின் தொகுப்பாக இக்கட்டுரை உங்களின் சிந்தனக்கு தீனி போடும் இன்ஷா அல்லாஹ்.
கடந்த 2005, 2010ஆம் ஆண்டுக்கான ஜானாதிபதித்தேர்தலில் ஐ.ம.சு.மு யின் பொது அபேட்சகரான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமோக வெற்றியீட்டி ஆட்சியை தனதாக்கிக் கொண்டார். 2005ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் விடுதலைப்புலிகளுடனான பல தசாப்த யுத்தத்தை முன்னிருத்தி, யுத்த நிறுத்த தாரகமந்திரத்தை தேர்தல் விஞ்ஞாபனமாக மும்மொழிந்து ஓட்டு வங்கியை ஐ.ம.சு.மு லாபகமாக தன்வசப்படுதியது. அதே போன்று 2010 ஆம் ஆண்டிலும் பழம் நழுவி பாலில் விழுந்ததாற் போல் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்து ஒரு வருடத்திலேயே யுத்த வெற்றியை மக்கள் மனதில் வெள்ளையடித்து போட்டிகள், சவால்கள்லின்றியே வெற்றியை தனதாக்கிக்கொண்டது. யுத்தத்தை வெற்றிக்கொண்டது பெருபான்மை மக்களாக இருந்தாலும், சிருபான்மை தமிழ், முஸ்லிம் மக்களாக இருந்தாலும் ஒரு வித நிம்மதிப் பெருமூச்சை வெளிப்படுதியவர்களாகவே உணரப்பட்டார்கள். எனவே யுத்த வெற்றி என்பது பாராட்டத்தக்கது, போற்றத்தக்கது என்பதில் எல்முனையளவும் சந்தேகமில்லை.
ஆனால் 2010 – 2014 ஆட்சிக் காலப்பகுதியில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை, சமயவுரிமை என்பன கேள்விக்குறியாக்கப்பட்டது. புதிதாக முளைத்த பொதுபலசேனா என்ற முதலை முஸ்லிம்களை விழுங்க கங்கனம் கட்டிக்கொண்டிருந்தது. அவ்வமைப்பின் விஷம விதை நடப்பட்டு நான்கே ஆண்டுகளில் நாடுபூராகவும் முஸ்லிம்களை நோக்கிய அவர்களின் அம்புகள் பாய்ந்தன. அனைக் கடந்த வெள்ளம் போல் அதிகாரத்தை தம் கையிலேந்தி “இந் நாட்டில் நாங்கள்தான் உத்தியோகபூர்வமற்ற பொலிஸ்காரர்கள்” என்று பகிரங்கமாகவே பேசுமளவிற்கு நிலைமை கைமீறிப்போனது.
பொது பலசேனா முஸ்லிம்களுக்கு எதிராக குறித்த 4 ஆண்டுகளில் மாத்திரம் ஏற்படுத்திய அழியாத மனக்கறைகள் ஏராளம் தாராளம். பள்ளிகளை உடைத்தமை , பள்ளிகள் கட்டுவதை தடுத்தமை, பள்ளியினுல் பன்றி மாமிசத்தை வீசியமை, “அல்லாஹ்” என்று வாசகமிடப்பட்ட கொடும்பாவி எறிக்கப்பட்டமை, மாடு அறுப்பதை தடை செய்தமை, ஹலாலை இல்லாதொழித்தமை, இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரத்தை கலைந்தெடுக்க முனைந்தமை, பாங்கு சொல்வதை தடுக்க எத்தனித்தமை, மார்க்கப் பிரச்சாரங்களை முடக்கியமை, முஸ்லிம்களின் வியாபாரங்களை சூரையாடியமை, அவர்களின் பூர்வீகத்தை கேள்விக்குறியாக்கியமை, இஸ்லாத்தையும் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களையும் கேலி செய்தமை, அவற்றை இலங்கை மண்ணிலிருந்து அப்புறப்படுத்த முனைப்பு காட்டியமை, முஸ்லிம்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயற்ச்சித்தமை போன்ற இன்னோறென்ன சொல்லனா துயரங்களை கட்டுமீறி வரலாற்றில் கறைபடித்தனர்.
இவைகள் அனைத்தையும் மிஞ்சும் வகையில் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் முஸ்லிம்களின் மனதில் என்றுமே வற்றாத தலும்புகளாக அலுத்கம கலவரத்தை திட்டமிட்டு காய் நகர்தினார்கள். கலவர சூழலை நான்கு சுவருக்குள் திட்டம் தீட்டி, நான்கு இளம் உயிர்களை காவு கொண்ட கயவர்கள், மறுநாள் காமராஜன் வேடம் பூண்டு கதிரைகளில் அமர்ந்து முதலைக்கண்ணீர் வடித்த வராலாறும் முஸ்லிம்களின் மனதில் இன்னு ஆழ்மனதில் ஒருமூலையில் குமுறுகிறது. கத்தி எடுத்தவனை கண்டுகொள்ளாமல் கத்திக்குத்திற்கு இரையாகியவனை நோக்கி, உயர்பீடத்திலிருந்தே விமர்சனக் கனைகள் ஓங்கி ஒலித்தமையும் முஸ்லிம் சமூகம் மறந்துவிடவில்லை. பொதுபல சேனாவின் அட்டகாச, அட்டூளிய வரலாற்றுப்பக்கங்களை இவ்விட்த்தில் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டதன் நோக்கம் காலங்கள் வெறுண்டோடினாலும் காயங்கள் மறைவதில்லை.
எனவே இக்கறை படிந்த வரலாற்றுப் பக்கங்களை பக்கவாட்டில் நிலைனிறுத்தி வைத்துவிட்டு, நமது சிந்தனையை ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிட்டுக் கணக்குப்போட்டுப்பார்த்தால் மனசாட்சி முஸ்லிம்களாகிய எல்லோருக்கும் ஒரே முடிவைத்தான் எதிரொலிக்கும்.
பொதுபலசேனாவின் அட்டாகாச அட்டூளியங்கள் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாகவே வேவுபார்க்கும் பொழுது ஆட்சிபீடமிருந்த ஆட்சியாளர்களின் சமிஞ்சைகள் எவ்வாறு இருந்தன? பள்ளிகள் உடைக்கப்படுகின்ற பொழுது, முஸ்லிம்கள் மிகவுமே மதிக்கின்ற ஆலயத்தை காடையர்களிடமிருந்து பாதுகாக்க ஆட்சியாளர்களிடமிருந்து நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டதா? கண்காணிப்பு கெமராக்களில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களின் அடையாளம் பட்டவர்த்தனமாக துலங்கிய போதும் அதைக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? விசாரனைகளை முடுக்கிவிட்டு பிரதான சூத்திரதாரியை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை கொடுக்கப்பட்டதா? இந்திய நாளிதழ் ஒன்றிற்கு “ நாட்டு நிலைமை இப்படியே செல்லுமாயின் முஸ்லிம்களும் ஆயுதம் தூக்க நேரிடும்” என்ரொரு அறிக்கையை மத்திய மாகாண சபை உறுப்பிணர் அஸாத் ஸாலி அவர்கள் வெளியிட்ட மாத்திரமே அஸாத் ஸாலி அவரகள் புலன் விசாரனைக்கு முகம் கொடுக்க நேரிட்டார்கள். ஆனால் நான்கு உயிர்களை காவு கொண்டமைக்கு காரணமாக இருந்த அலுத்கம கலவரத்தைத் தூண்டிய, ஆவேசமாக மக்களை இனத்துவேச வார்த்தைக் கொப்பளிப்பால் உசுப்பேத்திய கலபொட அத்தே ஞானசாரவை ஏன் புலன் விசாரனை மேற்கொள்லமால் சட்டம் மௌனித்தது?
இவ்வாறு நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுக்கு எதிரான அசம்பாவிதங்களுக்கு பொறுப்புக் கூற கடமைப்பட்ட ஆட்சியாளர்கள், உயிரற்ற ஜடமாக காட்சியளித்த பரிதாபத்தையே பார்க்க முடிந்தது.
இலங்கை நாட்டைப் பொறுத்தவரை பல இன, மதங்களைக் கொண்ட கலப்பு நாடு. அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டுதான் ஜனநாயகம் மலர்ந்திருக்கிறது. ஜனநாயகம் கேள்விக்குறியாகி சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படாது, எட்டி உதைக்கும் அரக்கர்களுக்கு தீனி போடும் கடந்தகால ஆட்சியை நிலைபெறச்செய்வதானது வானை நோக்கி உமிழ்ந்து கொள்ளும் செயலுக்கு ஒப்பானது என்றாலும் மிகையேதுமில்லை. அண்மைய பொதுபலசேனாவின் தேர்தல் அறிக்கையாக ஹைட் பார்க்கில் வைத்து அதன் செயலாளர் ஜானசாரவினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் இக்கட்டுரையின் கருவை இன்னும் செப்பனிட்டுக்காட்டுகிறது. அதாவது பொதுபலசேனாவை தடைசெய்ய வேண்டும் எனக்கோரும் அங்கத்தவர்களே பொது எதிரனையின் இருப்தனாலே தான் தாம் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக, கூறியிருந்தார்.
எனவே முஸ்லிம்களாகிய நமக்கு ஆட்சி பீடங்களுக்கு மிகச்சிறந்த பாடத்தைப் புகட்ட வேண்டிய ஜநனாயக வசந்தத்தின் சந்தர்ப்பம் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி நமது கைகளில் தவல இருக்கின்றது. பாடம் புகட்டும் அரசியல் சாணக்கியமாக முஸ்லிம்கள் இத்தேர்தலை படித்தபாடங்களை பாடமாக கொண்டு பயன்படுத்திக் கொள்வதுதான் எதிர்வரும் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் முஸ்லிம்களின் மிகச்சிறந்த சாமர்த்திய நகர்வாக இருக்கும். இக்கருத்தில்தான் பெரும்பாளான அரசியல் விமர்சனர்களின் ஏகபோக முடிவாகவும் நோக்கபடுகின்றது. சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. ஆனால் துரதிஷ்டம் முஸ்லிம் கட்சிகளுக்கு இவ்விடயம் இன்னும் உறைக்கவில்லை என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
அல்லாஹ்வே எல்லாவற்றையும் அறிந்தவன் .
MK YASIR

No comments:
Post a Comment