13 Feb 2015

பெப்ரவரி 14: காதலர் தினமா? காமுகர் தினமா?

வருடா வருடம் பெப்ரவரி 14ஆம் திகதி உலகலாவிய ரீதியில் காதலர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. காதலுக்கு மரியாதை, காதலில்லா உலகமில்லை, காதல் செய் காவியம் படைக்கலாம் போன்ற தொனிப்பொருள்களின் கீழ்  உலகின் பல நாடுகளிலுமுள்ள காதல் மன்னர்கள், காதல் அபிமானிகளால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுவருகின்றது. வருடத்தில் கொண்டாடப்பட்டு அனுஷ்டிக்கப்படும்  அன்னையர் தினம், ஆசிரியர் தினம், சிறுவர் தினம் போன்ற தொடச்சியில் காதலர் தின கொண்டாட்டத்தின் நோக்கமும், முதலாலித்துவ கோட்பாட்டு முதலைகளின் வர்த்தக மயமாக்கலேயென்றால் அதில் மிகையில்லை. மேலும் காதலர் தினம் மனிதனின் இயல்பான கதலுணர்வை பிரதிபலித்து காத்திரமான ஒரு கட்டுக்கோப்பான அளவுகோளுடன்  கொண்டாடப்படக்கூடிய நாளாக அனுஷ்டிக்கப்படுமானால் அதில் ஓரளவு நியாயம் உண்டு. ஆனால் காதலர் தினம்  உறுச்சிதைந்த சிலையாக காமுகர் தினமாக உருமாற்றப்பெற்று சமூகச் சீரழிவை நோக்கிய அடிச்சுவடுகளை பதியவைத்துள்ளது.


காதல் என்ற சொல்லுக்கு தமிழகராதியின்படி அன்பு, பாசம், நேசம் போன்ற சொற்கள் ஒத்தச் சொல்லாக கருதப்படுவதாக இருந்தாலும் காதலர் தினம் ஆண், பெண் கலப்புப் பாச உணர்வை மட்டும் வெளிப்படுத்தவே அங்கீகாரம் பெற்றுள்ளது. உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் (ஆண், பெண்) காதல் என்ற உணர்சிக்கு அல்லது உந்துதலுக்கு அப்பாட்பட்டவைகள் அல்ல. சித்தசுவாதீனமுள்ள ஒருவன் அல்லது ஒருத்தி "தனக்கு காதல் உணர்வு இல்லை" என்று வாதாடினால் அது வெறும் நாக்குப் பிறழ்வின் ஓசை வடிவமே தவிற உள்ளத்திலிருந்து உதிர்ந்தவை அல்ல. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல் மனிதனின் இருபால் இயல்பான காதல் உணர்வும் கட்டுக்கோப்புக்குள் வரையரைக்கு உட்பட்டதாக கடிவாளம் இடப்படல் வேண்டும். இல்லையேல் இயற்கை போங்கிலிருந்து விலகி அது நமக்கே விரோதியாகி நம்மை அதளபாதாளத்திற்கு இட்டுச்சென்று விடும். வெள்ளம் வரும் முன்னே அனைகட்ட வேண்டும். காதலின் பெயரில் கழிசடைகள் அரங்கேறி உணர்ச்சிகள் முறுக்கேறி கட்டவிழ்ந்து விட்ட பிறகு கைசேதப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அந்தக் கட்டுக்கோப்பு கடிவாளம்தான் திருமணம் என்ற தாம்பத்திய ஒப்பந்தம். திருமண ஒப்பந்தம் இயல்பான (ஆண்,பெண்) காதலுணர்வை நெறிமுறைக்கு உட்பட்டதாக சமூக அங்கீகரத்தோடு ஒரு எல்லையை நிர்ணயித்து உயிரோட்டமாக பேணுகிறது. இதனால்தான் திருமணத்திற்கு முன் காதல் வசப்படுபவர்கள் இயல்பான காதலுணர்வை நெறிமுறைக்கு அப்பால் தீர்க்க முனைந்து அவமானத்தையும் சமூக ஓரங்கட்டல்களையும் சம்பாதித்துக்கொள்கின்றனர். 

எனவேதான் காதலர் தினத்தை சாடுபவர்கள் காதலுக்கு எதிரானவர்களா? என்றால் கிடையவே கிடையாது. சமூக அங்கீகாரத்துடனான சுயகௌரவமான (கனவன், மனைவி) ஆண், பெண் காதலுக்கு அப்பால் உணர்ச்சிகளை கட்டுங்கடங்காமல் காற்றில் விடப்பட்டு, காட்சிப் பொருளாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ள அநாகரிகமான காதல் கலாச்சாரத்தையே கண்டிக்கிறோம். இக்கலாச்சார சீர்கேட்டின் ஏகபோக அங்கீகார முத்திரை தினமே பெப்ரவரி 14. இத்தின கொண்டாட்டம் தொன்று தொட்டு வரம்புகளை மீறிய காதலின் பெயரில் காம வெறியாட்டமாகவே அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

துரதிஷ்டம்! இக்காம வெறிக்கொண்டாட்ட வலையில் உயரிய, உன்னத கொள்கையை சுமந்த நமது சகோதர, சகோதரிகளும் சிக்கித்தவிக்கும் பரிதாபத்தை காணும் போது நெஞ்சை பதற வைக்கிறது. இஸ்லாத்தின் ஒளியில் காதலர் தினத்திற்கு மெல்லிய கீரலேனும் தொடர்பு இல்லை என்றாயினும் இயற்கைக்கு முரணான காட்டுமிராண்டித்தனமான இச்சீரழிவு சித்தாந்தத்திற்கு  தன்மானம் கொண்ட எவரும் ஆதரவாக செயற்படமாட்டார்கள் என்பதுதான் உண்மை.

பெப்ரவரி 14 காதலர் தின கொண்டாட்டத்தை இரவில் கொண்டாடப்படுவதையே மரபாக வைத்திருக்கின்றனர். இரவு நேர கொண்டாட்டம் என்றாலே இதன் மூடலான ஆழ அகலங்களை விரிவுபடுத்தி விளக்கப்படுத்த வேண்டியதில்லை. பொங்கி எழும் காதல் உணர்ச்சிகளை இரவு நேர களியாட்ட நிகழ்ச்சி நிரழுக்குள் ஒழுங்குபடுத்தப்படுவதை சுயகௌரவம் கொண்ட ஒருவர் எப்படி அங்கீகரிக்க முடியும்? இத்தகைய நிகழ்சிப்பங்களிப்பில் தனது தாயையோ, மகைளையோ, சகோதரியையோ நிறுத்தி அழகுபார்க்க எங்கனம் நமது மனது இடம் கொடுக்கும்?

சமூக அங்கீகாரத்துடன் திருமண ஒப்பந்தத்தின் மூலம் உறவுகளான கணவன், மனைவி உறவையும் காதலர் தினத்தில் தமது காதலை வெளிப்படுத்துகிறோம் எனும் போர்வையில் உலக மக்களுக்கு விளம்பரப்படுத்தி அவர்களை காட்சிப்பொருளாக அடையாளப்படுத்தி, நான்கு சுவருக்குள் பேணவேண்டிய உணர்ச்சிகளை நாளுபேர் பார்த்து நாறடிக்கும் காதல் மறியாதையத்தான் காதலர் தினம் போஷிக்கிறதா?

காதலர் தின இரவு நேர கொண்டாட்டத்தில் எவ்வித கட்டுப்பாடுகளுமற்ற பல ஆண்கள் பல பெண்களுடன் போதை வயப்பட்ட நிலையில், ஒட்டி உரசி ஆடல் பாடல்களில் ஈடுபடும் அறியாமைக்காலத்து கூத்துக்கள்தான் காதலின் உண்ணதமான உணர்ச்சிகளா?

காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் எனும் சுலோகங்களுடன், பெண்களை பண்டப்பொருளாக பயன்படுத்தி அவர்களின் கற்பை அற்ப விலைக்கு காவு கொடுக்கும் ஊடக விபச்சாரம்தான் காதலை வாழவைக்கும் இலட்ச்சணமா?

காதலர் தினத்தில் அழையா விருந்தாளியாக தினசரி பத்திரிகை முதல் இணைய வலை வழியே தித்திக்கும் முத்தக்கட்சிகளை சர்வசாதரணமாக கட்டழித்து விட்டு அதன் மூலம் இளைய சமூகத்தினரை திசை மாறிய, நெறி பிறழ்ந்த சிந்தனைத்தாக்கத்தை விதைக்கும் காமுகர் தினம் நமக்கு தேவைதானா?

அறிவுபூர்வமான சிந்தனை தேடல்களில் பணத்தையும், காலத்தையும் செலவழிக்கக் கடமைப்பட்ட நமது இளையதலைமுறையினர்; திடீர் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு உறுவான காதலி/காதலுனுக்காக காதலர் தினத்தில் பல வழிகளில் காலத்தையும், பணத்தையும் விரலுக்கு இரைத்த நீராக செலவு செய்வதை சமூக அக்கரையோடு எப்படித்தான் பொறுத்துக் கொள்ள முடியும்?

முதலில் காதலர் தினத்தை உலக அங்கீகாரத்துடன் முத்திரை பதித்தவர்கள் பெண்களின் கற்பையும் சேர்த்தே உலக அங்கீகாரமாக்கி காமுகர்களின் காமப் பசிக்கு விருந்தளித்துள்ளனர். உருச்சிதைக்கப்பட்ட காதலின் கோரதாண்டவத்தில் எத்தனை பெண்களின் கற்புகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது என்பதை வரலாற்று நெடுகிழும் புள்ளிவிபரங்கள் பரைசாற்றிக் கொண்டிருக்கின்றன. 

எனவே காதலர் தினமும் காமுகர்களின் தினமாகவே வருடாவருடம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. அனைவரும் இத்தினத்தை புறக்கணிப்பது மட்டுமல்லாமல் இச்சீர்கேடு அஸ்திவாரத்திற்கெதிராக போர்க்கொடி தூக்கவும் கடமைப்பட்டுள்ளோம். எமது சிறார்கள், பெண்கள், இளைய தலைமுறையினரை காதலர் தின இக்கொடிய எபோலா வைரஸ் கிருமியிடமிருந்து பாதுகாக்க வேண்டிய கடமையும், கடப்பாடும் ஒவ்வொரு சமூக ஆர்வாலர்கள் மீதும் அவசரமும் அவசியமாகவும் இருக்கிறது. குறிப்பாக பதின்ம வயதினர்களை உண்மையான ஒழுங்குபடுத்தப்பட்ட காதல் உணர்வலைகளை சிதைத்து திசைமாறிய காம கோட்பாட்டு சிறைக்குள் சிறைவைக்கும்  ஊடக சிந்தனாதிக்கத்திலிருந்து விடுதலை செய்ய நாமனைவரும் திடசந்தர்ப்பம் பூணவேண்டும். 

MK YASIR

No comments:

Post a Comment