அல்லாஹ் அல்லாதவைகளை அவனின் இடத்தில் வைத்து அவைகளை கடவுள் நிலைக்கு உயர்த்தும், அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவமாக இணைவைப்பு கருதப்படுகிறது. இதற்கு முற்றிலும் எதிராக அழைப்புப்பணியை மேற்கொள்வது
ஒவ்வொரு முஸ்லிமினதும் தாரகமந்திரமாகவும், அத்தியவசியமானதும், எல்லாவற்றையும் தாண்டி முதன்மையானதாகவும் இருத்தல் வேண்டும்.
மேலும் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் நபி (ஸல்) அவர்கள் வரை உலகிற்கு அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் ஓரிறைக் கொள்கையை, ஷிர்க்கிற்கு எதிரான தமது உச்சகட்ட பிரச்சாரத்தை உயிரையும் துச்சமாக மதித்து மேற்கொண்டார்கள். அன்றைய சமூகத்தினரிடயே காணப்பட்ட, கடவுள் தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் அனைத்து ஷிர்க்கான காரியங்களிற்கும் எதிராக குரலை உயர்த்தினார்கள். ஒட்டுமொத்த நபிமார்களும் ஓங்கி ஒலித்த கொள்கை முழக்கத்தை, அவர்களுக்கு பின் தொடர்சியாக அவர்களின் முன்மாதிரிகளை பின்பற்றும் ஒவ்வொரு தனி நபர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் முதன்மையாகவும், தீவிரமாகவும் பற்றிப்பிடித்து உயரிய சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை செய்ய வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் இன்றியமையாததாகும்.
ஆனால் இன்றைய சில இஸ்லாமிய போர்வை போர்த்திய இயக்கங்கள், ஷிர்க்கிற்கு ஏகபோக சொந்தக்காரர்களாக பரிணமிக்கின்ற அதேவேளை, சில போலி கொள்கை இயக்கங்கள் எவ்விடத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ! அதனை பிற்படுத்தி அனாமோதய பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அல்லாஹ்வின் அதிகாரத்தை அவனின் அற்ப படைப்புகளுக்கு வழங்கப்படும் இணைவைப்புக் காரியம் தலைவிரித்தாடும் சபைகளிளெல்லாம் இயக்கத்தின் பிரச்சாரப் போர் வீரர்கள்? என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள், “இஸ்லாமியக் குடும்பம்”, ”ஒற்றுமையின் அவசியம்”, ”நற்பண்புகளை பேணுவோம்” போன்ற தலைப்புக்களில் இரண்டு மணித்தியாளங்கள் அடுக்கு மொழிகளில் அகல வாய் திறந்து, குப்பை மேட்டில் ரோஜா கன்றுகளை நடும் அறைவேக்காடு வேலையை செய்கின்றனர்.
ஆனாலும் "நாம் ஷிர்க்கிற்கு எதிரானவர்கள்தாம்" என்று வேறு சொல்லிக்கொண்டு கிணற்றுக்குள் இருந்து கொண்டு கிண்ணஸ் சாதனைக்கு ஏப்பம் விடுகின்றனர்.
இறைவனின் தூதுவர்கள் உடைத்துப் பேசிய ஷிர்க்கிற்கு மௌன அங்கீகாரம் கொடுக்கும் இப்பாடியான முதுகெலும்பற்ற இயக்கங்கள் சமூகத்திற்கு மிகப்பெரும் சாபக்கேடு என்றால் அதில் மிகையேதுமில்லை. மேலும் இத்தகைய இயக்கங்களின் "முரண்பாட்டில் உடண்பாடு காணுதல்" எனும் முட்டைகோஸ் கொள்கையின் பிரதிபலனாக நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பள்ளிகளின் நிர்வாக பொறுப்புக்கள், குத்பாப் பிரசங்கங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றிற்கு சமூக அங்கீகாரம் கிடைதுள்ளதாக மாறு தட்டிக்கொண்டாலும், தூய்மையான கலிமாவின் ஓரிறைக் கொள்கையை மக்கள் மனதில் விதைக்கும் எவ்வித காத்திரமான பிரச்சார உட்கட்டமைப்பும் இவ்வியக்க காரர்களின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை. இன்று பல பிரதேசங்களில் இன்னும் தர்கா, தாயத்து, தகடு, போத்தல் குப்பி என்று ஷிர்க்கின் பல வடிவங்கள் சர்வசாதாரணமாக அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சரியான கொள்கையை காய்தல் உவர்த்தல் இன்றி உண்ர்த்தப்பட வேண்டிய இடத்தில் முறையாக உணர்த்தப்படுமானால் அல்லாஹ்வின் அருளால் ஷிர்க்கின் பாரதூரம் மக்களின் உணர்வுகளை தட்டிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. காய்க்கின்ற மரத்திற்குதான் அடி விழும் என்ற உண்மைக்கு ஒப்ப அவர்களின் சமூக ஒற்றுமை பேசுபொருள் என்பது அஸ்திவாரம் இல்லா கட்டிடத்திற்கு சமாந்தரமாகும்.
இதில் குறித்த இயக்கக் காரர்களின் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், நபிமார்கள் செய்த முதன்மையான ஷிர்க்கிற்கு எதிரான பிரச்சார வீச்சை அப்படியே பின்தொடர்ந்து இணைவைத்தலின் சாயல் கூட சமூகத்தில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அயராது உழைத்த உத்தம இமாம்களான முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (றஹ்), இப்னு தைமியா (றஹ்), நாஸிருத்தீன் அல்பானி (றஹ்) போன்றவர்களின் முன்மாதிரிக்கு நாம்தான் சொந்தக்காரர்கள் என்று வாய்கூசாமல் தமக்கிடையே பெறுமை பாராட்டிக்கொள்கிறார்கள். இவர்களின் இச்சொல் வடிவத்திற்கும் குறித்த இமாம்களின் அன்றைய செயல் வடிவத்திற்கும் மலைக்கும் மடுவிற்கும் வித்தியாசம் என்றால் இயக்காரர்களின் செயல் வடிவமே இதற்கு மிகப்பெரும் சான்று.
எனவே இயக்கத்தின் பெயர்குறிக்கப்படாமல் அவைகளின் தன்மைகளோடு குறிப்பிடப்பட்ட இவ்வாறான இயக்கங்கள் தமது அழைப்புப்பணியின் உட்கட்டமைப்பை சீரமைக்க வேண்டும் என்பதே இச்சிறிய ஆக்கத்தின் அவா.
நாம் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனுக்கே உரிய பண்புகளை யாருக்கும், எவருக்கும், எந்தவொரு சடப்பொருளுக்கும் பங்கு போட மாட்டோம் என்ற கொள்கையை மனதில் ஆழப்பதிந்து நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். இக்கொள்கைக்கு எதிரான இணைவைப்பு அராஜகத்திலிருந்து, மக்களை நிரந்தர நரகத்திலிருந்து விடுவிக்க அழகிய முறையில் அழைப்பு பணியை மேற்கொள்வதற்கு உறுதி பூண வேண்டும். இயக்க வேறுபாடுகளை மறந்து அவரவர் அவர்களின் திறமை, முயற்சி, சக்திக்கு ஏற்ப கொள்கை முழக்கத்தோடு அழகிய முறையில் ஷிர்க்கிற்கு எதிரான அழைப்புப் பணியை கைக்கோர்த்து தொடர்வதற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

No comments:
Post a Comment