உலகலாவிய பௌத்தர்கள் மே மாதம் பௌர்னமி தினத்தில் வெசாக் எனும் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பௌத்தர்களை பெருபான்மையாகக் கொண்ட இலங்கையிலும் வெசாக் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. புத்தரின் வரலாற்றைச் சித்தரிக்கின்ற வகையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோரணங்கள், வெசாக் கூடுகள், பிரித் வைபகங்கள், அன்னாதான நிகழ்வுகள் என பல்வேறு அம்சங்களின் தொகுப்புக்களால் வெசாக் பண்டிகை விழாக் கோளமிடுகிறது. குறிப்பாக அன்னதான நிகழ்வுகள் நாட்டின் நாலாபுரங்களிலும் மக்கள் அலை மோதுகின்ற அளவில் நடைபெறுகிறது.
இவ்வன்னதான நிகழ்வுகளில் முஸ்லிம் பெயர் தாங்கிய அப்துல்லாக்களும், பாத்திமாக்களும் பங்குபற்றும் காட்சியே மிகப் பரிதாபகரமானது. அன்னாதானமாக பரிமாரப்படும் உணவுகளுக்காக ஆண்கள் பெண்கள் குழந்தைகள் சகஜம் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலக் காட்சியை ஊர்கள் பாரபட்ச்சமின்றி வருடம் தோறும் கண்களால் காணக்கிடைக்கிறது.
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே!
படையல் செய்யப்பட்ட உணவு
வெசாக் அன்னதான நிகழ்வுகளில் கலந்து கொள்வதும், அவ்வுணவுகளை பெற்றுக்கொள்வதும் கூடாது என்பதற்கு அவ்வுணவுகள் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக படையல் செய்யப்பட்டு பரிமாரப்படுகின்றமையையும் காரணமாக குறிப்பிடலாம். இவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களுக்கு படைக்கப்பட்ட உணவுகளை திருமறை தெளிவாகவே தடை செய்திருக்கிறது.
செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி மற்றும் அல்லாஹ்வைத் தவிர, மற்றவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணி ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆயினும், யாரேனும் இறைச்சட்டத்திற்கு மாறு செய்யும் நோக்கமில்லாமலும், தேவையான அளவை மீறாமலும் இப்பொருள்களில் ஏதேனும் ஒன்றைப் புசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானால் நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான்.
வெசாக் அன்னதானத்திற்காக தயாரிக்கப்பட்ட உணவுகளை பெரும்பாலும் மதகுருமார்களை வைத்து பிரித் ஓதப்பட்டு, ஜோதிடன் மூலம் சுப வேளை கணிக்கப்பட்டு, மதகுருமார்களின் வழி நடத்தலுடன் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களுடன் (பௌத்தர்களின்) கடவுளின் ஆசிர்வாதத்துடனே பரிமாரப்படுகிறது. இவ்வாறு அல்லாஹ்வை விடுத்து மற்ற தெய்வங்களின் நினைவாக தயாரிக்கப்பட்ட உணவுகள் அடிப்படையிலே பெற்றுக்கொள்வதற்கு அனுமதி இல்லை என்பதை சிந்தித்து சீர் பெற கடமைப்பட்டுள்ளோம்.
சில வியாபார நிறுவனங்களின் அன்னதான வைபவங்களில் படையல் இல்லாவிட்டாலும் ஏலவே குறிப்பிட்ட இஸ்லாத்திற்கு விரோதமான (மாற்றுமத) நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக இருப்பதனால் இவற்றிலிருந்தும் தவிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் வெசாக் அன்னதான நிகழ்வுகளில் பங்குபற்றலாமா? என்ற வினாவிற்கு வஹீயின் ஒளியில் முடியுமான தெளிவை கொடுப்பதே இவ்வாக்கத்தின் பிரதான நோக்கம்.
அதற்கு முன் முன்னுரையாக, வெசாக் பண்டிகையின் வரலாற்று ரீதியிலான நோக்கத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ளல் வேண்டும்.
பௌத்தர்கள், கி.மு 500களில் வாழ்ந்ததாக கருதப்படும் புத்தர் என்ற நல்ல மனிதரை கடவுளாக ஏற்படுத்தி அவரை வழிபடுகிறார்கள். வெசாக் பண்டிகை 3 காரணங்களால் அனுஷ்டிக்கப்படுவதாக அவர்களின் குறிப்புகள் சுட்டி நிற்கின்றன. அதாவது,
1. புத்தர் பிறந்தமைக்காக
2. புத்தகாவில் (நேபாளத்தில்) புத்தர் தவம் இருந்து புத்த நிலையை எய்தியமைக்காக
3. புத்தர் இறந்தமைக்காக
குறித்த மூன்று காரணங்களிலும் அவர்களிடையே கறுத்து வேற்றுமைகள் இருக்கின்றன. எது எப்படியோ குறித்த மூன்றையும் இணைத்து சாறுபிளிந்து சுருங்கச் சொன்னால், அவர்களின் (பௌத்தர்களின்) கடவுளை நினைவு படுத்துவதற்காக வேண்டி வெசாக் பண்டிகை கொண்டாப்படுகிறது எனலாம். இன்னொரு வகையில் சொன்னால் வெசாக் பண்டிகை பௌத்த மதத்தை பிரதிபலித்தே அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே வெசாக் பண்டிகையின் இவ்வடிப்படைகளை நோக்குமிடத்து பல வழிகளில் இஸ்லாத்திற்கு முரணாக காணப்படுகிறது. இதனை ஆழ்மனதில் பதியவைத்தவர்களாக இஸ்லாத்தின் வரையரைகளை நோக்குவோம்.
இஸ்லாம், மார்க்கத்திற்கு முரணான நிகழ்வுகள் அம்சங்கள் போன்றவற்றில் கலந்து கொள்வது, அதற்கு ஒத்தாசையாக இருப்பது, அவற்றை அங்கீகாரம் கொடுக்கும் விதமாக எந்தவொரு செயற்பாடுகளையாவது மேற்கொள்வது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தெட்டத்தெளிவாக தடை செய்திருக்கிறது.
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
(அல்குர்ஆன்: 5:2)
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
(அல்குர்ஆன்: 4:140)
மேலும் (ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்றுவிடுவார்கள்.
(அல்குர்ஆன்: 25:72)
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.
(அல்குர்ஆன்: 109:6)
ஒரு மதத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு இஸ்லாத்தில் தெளிவான தடைகள் வந்துள்ளன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே!
(நூல்: அபூதாவூத் 3512)
வெசாக் பண்டிகையும் அதில் உள்ளடங்கப்பட்டிருக்கும் அன்னதான நிகழ்வுகளும் பௌத்தமத கலாச்சாரத்தை வெள்ளிடை மலையாக ஒப்புவிக்குகின்றபடியால், நிர்பந்தம் என்ற ஒரு காரணத்தைத் தவிர எந்தக் காரணத்திற்காவும் நம்மை எவ்விதத்திலும் அவற்றில் பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ளக் கூடாது என்பதுவே மேற்குறிப்பிட்ட செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.
இஸ்லாத்திற்கு மாறுபாடான வெசாக் நிகழ்வுகளில் இரண்டு காரணங்களுக்காக பங்குபற்ற முடியும். இவ்விரண்டு காரணங்கள் தவிர்த்து அவ்விடத்தில் மௌன தரிப்பைக் கூட தவிர்க்குமாறே இறைகட்டளை பிறபிக்கப்பட்டிருக்கிறது. பின்வரும் செய்தியுனூடாக இதனை புரிந்து கொள்ள முடியும்.
உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால் தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும்.
அறிவிப்பவர் : அபு ஸயீதுல் குத்ரி (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்1140
அறிவிப்பவர் : அபு ஸயீதுல் குத்ரி (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்1140
வெசாக் தின அன்னதான நிகழ்வுகளை எமது கைகளினாலோ, வாய்களினாலோ தடுப்பதற்கு இலங்கை நாட்டைப் பொறுத்தவரை சாத்தியமில்லாத, நிர்பந்த இயலாமை தடையாக இருக்கிறது. ஆனால் அந்த நிகழ்வுகளிலிருந்து மனதால் வெறுத்து அவ்விடத்திலிருந்து ஒதுங்குவதற்கு ஒவ்வொரு முஸ்லிமிற்கும் சாத்தியமானதும் கடைபிடிக்க முடியுமான அம்சமாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள கடமைப்பட்டுளோம்.
படையல் செய்யப்பட்ட உணவு
வெசாக் அன்னதான நிகழ்வுகளில் கலந்து கொள்வதும், அவ்வுணவுகளை பெற்றுக்கொள்வதும் கூடாது என்பதற்கு அவ்வுணவுகள் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக படையல் செய்யப்பட்டு பரிமாரப்படுகின்றமையையும் காரணமாக குறிப்பிடலாம். இவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களுக்கு படைக்கப்பட்ட உணவுகளை திருமறை தெளிவாகவே தடை செய்திருக்கிறது.
செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி மற்றும் அல்லாஹ்வைத் தவிர, மற்றவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணி ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆயினும், யாரேனும் இறைச்சட்டத்திற்கு மாறு செய்யும் நோக்கமில்லாமலும், தேவையான அளவை மீறாமலும் இப்பொருள்களில் ஏதேனும் ஒன்றைப் புசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானால் நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 16:115)
வெசாக் அன்னதானத்திற்காக தயாரிக்கப்பட்ட உணவுகளை பெரும்பாலும் மதகுருமார்களை வைத்து பிரித் ஓதப்பட்டு, ஜோதிடன் மூலம் சுப வேளை கணிக்கப்பட்டு, மதகுருமார்களின் வழி நடத்தலுடன் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களுடன் (பௌத்தர்களின்) கடவுளின் ஆசிர்வாதத்துடனே பரிமாரப்படுகிறது. இவ்வாறு அல்லாஹ்வை விடுத்து மற்ற தெய்வங்களின் நினைவாக தயாரிக்கப்பட்ட உணவுகள் அடிப்படையிலே பெற்றுக்கொள்வதற்கு அனுமதி இல்லை என்பதை சிந்தித்து சீர் பெற கடமைப்பட்டுள்ளோம்.
சில வியாபார நிறுவனங்களின் அன்னதான வைபவங்களில் படையல் இல்லாவிட்டாலும் ஏலவே குறிப்பிட்ட இஸ்லாத்திற்கு விரோதமான (மாற்றுமத) நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக இருப்பதனால் இவற்றிலிருந்தும் தவிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாத்தின் சிறப்பம்சமே மற்ற மதங்களிலிருந்து தனித்து விளங்குவதாகும். மற்ற மதங்களைப் பொறுத்தவரையில் பிற மதத்தைப் பிறதிபலிக்கின்ற காரண காரியங்களில் பங்குபற்றுவதை தடை செய்வதில்லை. இஸ்லாம், மார்க்க விவகாரங்களில் கூடுதல் கரிசணையுடன் இறுகிய நிலைப்பாட்டையே கைகொள்கிறது. மார்க்க விவகாரங்களில் இப்படியான நிலைப்பாட்டை கைகொண்டதினால் சகிப்புத்தன்மையற்ற, நல்லிணக்கத்திற்கு எதிரான மார்க்கம் போன்ற எதிர் விமர்சனங்கள் எழுப்பப்படுகிறது. இவ்விமர்சனங்கள் எழுப்பப்படுவதற்கு கிஞ்சித்தும் நியாயமில்லை. ஏனென்றால் இஸ்லாம் இன நல்லிணக்கத்திற்கென்று அகன்ற பாரிய வாசலை திறந்தே வைத்துள்ளது. புனித உரைகளின் அடுக்கடுக்கான சான்றுகள் இதனை சளையாமல் ஒப்புவிக்கின்றன. ஆனால் மார்க்க விவகாரங்களில் நல்லிணக்க காரணங்காட்டி போலி நல்லிணக்கத்தை இஸ்லாம் ஒருபோதும் வரவேற்கவில்லை.
எனவே ஒரு மதத்தை பிரதிபலித்து, நடைமுறைப்படுத்துகின்ற வெசாக் அன்னதான வைபவங்களில் பங்குதாரர்களாக எம்மை அடையாளப்படுத்தி இஸ்லாத்தின் தனித்தன்மையை களங்கப்படுத்துகின்ற மகாபாதக காரியத்தை ஒட்டுமொத்தமாக துடைத்தெரிய இன்றே திடசங்கர்ப்பம் பூணுவோம்.

No comments:
Post a Comment