23 May 2015

தப்லீக் தலைக்கனம்

தலைப்பைப் பார்த்ததுமே அசந்து போய் ஏதோ வில்லங்கமா இருக்குமோ? என்று சந்தேகிக்க வேண்டாம். தப்லீக் சகோதரர்கள் சற்று உணர்ச்சிவசப்பட்டு  தலைகால் புரியாமல் மனதிற்குள் திட்டித்தீர்த்துக்கொள்ள வேண்டாம்.  குறித்த தலைப்பில் இவ்வாக்கம் வரையப்படுவதின் பிரதான காரணம், எனது வாழ்வில் நிகழ்ந்த தப்லீக் கார்கூன் ஒருவரினூடான கசப்பான அலவலாவலின் உள்ளார்ந்த வெளிப்பாட்டின் பிண்னணி என்பதை, இவ்வாக்கத்தை ஆறம்பம் முதல் இறுதி வரை இதயசுத்தியுடன் வாசிப்பதினூடாக புரிந்து கொள்ள முடியும். எனவே தலைப்பின் பொருத்தப்பாடு தப்லீகின் அஸ்திவார காட்டுமானப் பணியின் வழுவற்ற, ஸ்திரமற்ற தன்மையே பளிச்சிடுகின்றது.

 
தப்லீக் வெறுமனே அமல்(?), இபாதத்துகளினால்(?) மாத்திரம் சமூகத்தை கட்டமைக்க முற்பட்டு, அதில் கரைந்து, உறைந்து எதிர் விமர்சனங்களை உள்வாங்கும் மனநிலை அற்ற வன்முறை கலந்த ரவுடிச பாணியில் பயணிக்கின்றனர் என்பதை எனது இந்த நிகழ்வினூடாக இன்னும் வெள்ளிடை மலையாக துலங்குகிறது. அதுமட்டுமல்லாமல் அவற்றின் சகிப்புத்தன்மையற்ற மிரட்டல் ரவ்டிச கலாச்சாரத்தை வரலாற்றுப் பின்புலத்தினூடாக பல தசாப்தங்களாக  அவதானித்தே வருகிறோம்.
 
சரி சம்பவத்திற்கு வருகிறேன்...
 
கொழுப்பில் எனது வர்தகத்தின் ஆறம்ப சில மாதங்கள் கடந்திருந்தன.
 
வழமையான சூரிய அஸ்தமனம்....
 
வழமையான வர்த்தக நடவடிக்கைகள்......
 
சூரியம் மறைந்து இருள் குடிகொள்ள ஓய்வு பெற கடையடைத்து விட்டு தங்குமிடம் விரைவு...
 
இவ்வாறு சுழற்சி இயந்திர வாழ்கைக்கு மத்தியில், ஒரு சாந்தமான காலைப்பொழுதை அடந்தேன். நன்கு அறிமுகமான,  அந்நாள் வரை அவரின் முகம் கண்டே கடை அலுவல்கள் நகர்கின்ற அளவிற்கு, கடைக்கு முன்னே பாதை வியாபாரம் செய்யும் பழுத்த தப்லீக் கார்கூன். வாட்ட சாட்டமான தனது கவர்ச்சியான இன்னும் சொல்லப்போனால் உணர்ச்சி மேலோங்கிய பேச்சினால் மற்றவர்களை வாயடைத்துக் கட்டிப் போடுவதில் வல்லவர். ஒட்டுமொத்த தப்லீக்கின் அடையாளத்தையும் பிததிபலிக்கின்ற வகையில் நடை, உடை, பாவனையைக் கொண்டவர். தவிர பிராந்திய (ஊர்) தப்லீக் செயற்பாட்டாளர்களின் முக்கிய புள்ளிகளில் ஒருவர்.  இப்படி, தப்லீக்கில் நான்; என்னில் தப்லீக் என்று சொல்லுமளவிற்கு அதில் ஊறித் திழைத்தவர்.
 
காலைப்பொழுதில் எனது வர்த்தக நிறுவனத்தின் உட்புறத்திற்கு சமூகம் தந்த அவரின் வழமையான பேச்சு அவரது பிழையான புரிதலை பலவந்த வற்புறுத்தலால் திணிக்க முற்பட்டிருந்தார்.
 
அதாவது வியாபாரம் செய்வது அவரவரது சொந்த ஊரில்தான் இருக்க வேண்டும் என்றும் அல்லது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு அன்றைய இரவே குடும்பத்தார் சகிதம் தத்தமது வீடுகளுக்கு செல்லக்கூடிய வகையிலான வியாபாரமாகத்தான் இருக்க வேண்டுமென்றும் தனது வழமையான கம்பீர பேச்சுத்தொணியில் கருத்தை பதிவு செய்தார். எத்தகைய பாததூரமான கருத்தாயினும் ஒருவர் தனது கருத்தை முன்வைப்பதற்கு பூரணமான கருத்துச்சுதந்திரம் உண்டு. அதே போன்றுதான் குறித்த ஒரு கருத்தை ஏற்காமல் அக்கருத்தை மறுத்து பதிவுசெய்வதற்கும் அதே பூரண சுதந்திரம் உண்டு. ஆனால் கருத்தை இன்னொருவருக்கு வலிந்து திணிப்பது மனித உரிமை மீரலாகும்.
 
குறித்த அவரது கருத்தில் எனக்கு சற்றுமே உடன்பாடு இல்லாததாலும், எனது வியாபார நிலையை முன்னிறுத்தி குற்றஞ்சாட்டப்பட்டமையினாலும் அக்கருத்தை முழுமையாக மறுத்து, “குறித்த தினத்தில் வீட்டிற்கு சமூகமளிக்கின்ற அமைப்பில்தான் வியாபாரம் இருக்க வேண்டுமென்றால் அதனை இரண்டு அடிப்படைகளில் ஒன்றில் நிறுவுதல் வேண்டும் என்று கேட்டிருந்தேன்."
 
அவைகளாவன,
 
1. அப்படி கூடாது என்பதற்கு புனித உரகளின் மூலம் தடையை (அல் குர்ஆன், ஆதரபூர்வமான ஹதீஸ்) முன்வைக்க வேண்டும்.
 
2. அறிவியல் ரீதியாக இதற்குறிய தடையை விளக்க வேண்டும்.
 
இதனை அவரிடம் வினவிய போதும் உரிய கேள்விக்கு பதிலளிக்காமல் மறுத்துக்கொண்டே தனது கருத்தில் விடாபிடியாக இருந்தார்.
 
அவரின் பிழையான புரிதலை சற்று இன்னும் ஆழமாக நுழைந்து தெளிவுபடுத்துவதற்காக அவரோடே ஒட்டி இருந்த விடயத்தையே உதாரணமாக முன்னிருத்தி ஒரு கேள்வியை பிரயோகித்திருந்தேன். குறித்த கேள்வியே அவரின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் பூதகரமாக வெடிப்பதற்கு காரணமாக இருந்தது.
 
அதாவது நான் அவரிடம்,
 
“உங்கள் வாதப்படியே குடும்பத்தார்களை விட்டுவிட்டு சில நாட்கள் வியாபாரத்தில் ஈடுபடுவது அவர்களை திருப்திப்படுத்தாத குற்றம் என்றால், அதே கோணத்தில் 40 நாட்கள், 1 வருடம், 2 வருடங்கள் என்று தப்லீக் ஜமா அத்தினர்கள் குடும்பத்தார்களை விட்டுச் செல்கிறார்களே இந்த நிலையும் குடும்பத்தார்களை திருப்திப்படுத்தாத நிலைக்கு ஆகுமா? நாங்கள் என்றால் வியாபர நோக்கத்திற்காக குடுமத்தார்களை பிரிந்து ஆகக்கூடியது 2 கிழமைகள் இருப்போம். ஆனால் ஜமாஅத்தில் செல்பவர்கள் 2 வருடங்கள் வரைக்கும் பிரிந்து இருக்கிறார்கள் என்றால் இதனுடைய விளக்கம்தான் என்ன?"
என்று கேள்வி கேட்டிருந்தேன்.
 
இந்த கேள்வியின் பிற்பாடு அடுத்த சில செக்கன்களிளே கார்கூனின் விஸ்வரூபப் பரிணாமம் வெளிகொனரப்பட்டது.
 
வார்த்தைகள் வரம்பு வேலிகளையெல்லாம் கிழித்து நொறுக்கப்பட்டு காற்றலைகளினூடாக காதை வந்து துளைத்தது. கோபம் வானைத்தொட்டு, கண்கள் செக்கச் சிவந்து,  தவ்ஹீத் முத்திரை குத்தப்பட்டு வசைபாடல்கள் வகைதொகையின்றி வார்த்தைகளில் வலம் வந்தன. இத்தனைக்கும் தப்லீகை சுட்டிக்காட்டி விமர்சித்த ஒரே காரணத்துக்காகவேண்டிதான் என்றால் அதில் சந்தேகமேயில்லை. திரும்பத் திரும்ப நிதானத்தை கையாளக் கேட்டுக் கொண்டும் மதம் பிடித்த யானையை போல் கட்டுபடுத்த நீண்ட நெடிய நேரம் சென்றுவிட்டது.
 
கோபத்தின் கோரதாண்டவத்தோடு அவரால் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது.
 
“தப்லீக்கில் ஜமாத் செல்வது வேறு வியாபாரம் செய்வது வேறு. தப்லீகில் ஜமாத் செல்வது ஒரு அமல். ஒரு உன்னதமான அமலை கொண்டு போய் வயிற்றுப் பிழைப்புக்காக செய்யும் வியாபாரத்தோடு ஒப்பிடுவது அக்கிரமத்தனம்." என்று எனது “தப்லீக் ஜமாத்" உதாரணம் சம்பந்தம் இல்லாதது என கர்ஜித்தார்.
 
 
“வியாபாரமும் அல்லாஹ்வின் திருப்தியோடு அவனின் வரம்புகள், கட்டளைகள் என்பவற்றை அணுசரித்து மேற்கொள்வோமானால் அதுவும் சிறந்த அமல் என்பதை சுட்டிக்காட்டி இக்கருத்திற்கு சான்றாக ஆதரபூர்வமான நபி மொழியொன்றையும் பதிவு செய்தேன்.
 
“உண்மையான நம்பிக்கையான வியாபாரி நபிமார்கள், உண்மையாளர்கள், ‘ஹீத்களுடன் இருப்பார்.” (அறிவிப்பவர்: அபூ சஈத் (ரழியல்லாஹு அன்ஹு), நூல்: ஸுனன் அல்-திர்மிதி)
 

நேர்மையாக வியாபரம் செய்யும் ஒருவருக்கு நாளை மறுமை நாளில் உன்னதமான அந்தஸ்து வழங்கப்படுமென்றால் வியாபாரமும் அமல் என்பதை அவரின் வாதத்திற்கு மறுப்பாக என்னால் எடுத்துரைக்கப்பட்டது.
 

மீண்டும் பழைய குறடி கதவை திறடி என்பது போல உரத்த குரல், வன்முறை கலந்த அசைவுகள், மிரட்டல்கள், எல்லினைகையாடல்கள், கேவலப்படுத்தல்கள் என்று ஒட்டுமொத்தமாக அனைத்தையும் உள்வாங்க நிர்பந்திக்கப்பட்டேன்.
 
ஒட்டுமொத்த நபிமார்களும் முதன்மையும், இலக்காகவும் கொண்டு முடுக்கிவிடப்பட்ட ஷிர்க்கிற்கு எதிரான ஏகத்துவப் பிரச்சாரத்தை ஏலெடுத்தும் பார்த்திராத தப்லீகின் உட்கட்டமைப்பில் பிராதான இடத்தைப் பிடித்திருக்கும் பாண்பாடுகள், இபாதத்துகளின் இலட்சணம் எதிர் விமர்சனங்களை இவ்வாறுதான் எதிர்கொள்வதா? சரி நான் பிழையாகவே கேள்வி கேட்டிருந்தாலும் அழகிய முறையில் நாகரீகமாக விளக்கி எடுத்துச் சொல்லக் கடைமைப்பட்டவர்கள் இந்தளவிற்கு கொந்தளித்து சீரிப்பாய்வது அமல், இபாதத், அஹ்லாக்குகளை சுமந்தவர்களுக்கு தகுமா?
 
மேற்படியான அலவலாவலில் அவர் ஒரு வாசனம் பேசியிருந்தார். அதாவது,
“மாலிகாவத்தை நகரிற்கு வந்து தப்லீகை ஏசிப்பார். அடுத்தது என்ன நடக்கும் என்று..."
 
ஏன் தப்லீக் எத்தகைய விமர்சனத்திற்கும் அப்பாற்பட்ட அல்லாஹ்வால் சான்று பகரப்பட்ட ஒரு தன்னிகற்ற இயக்கமா? இல்லை தப்லீகை விமர்சிக்கும் உரிமை யாருக்குமே கிடையாதா? ஏன் இந்த அக்கிரம வரட்டுச் சிந்தனை?
 
ஒருவரின் எதிர் விமர்சனங்களை சகிப்புத்தன்மையோடு உள்வாங்கிக் கொள்கின்ற அளவிற்கு கூட உள்ளம் இறுகி கல்லாகிவிட்டதா?
 
இத்தகைய வன்முறைக் கலாச்சார வக்கிரம் சிந்தனைகளோடு விமர்சனங்களை அணுகுவதனால்தான் அதில் பொதிந்துள்ள சிந்திக்கத்தூண்டுகின்ற பல விடயங்களை சிந்தனை மறக்கடித்து விடுகிறது.
 
குறித்த கார்கூனோடு நடந்த உரையாடலில் விரக்தியுற்று காழ்ப்புணர்வு கலந்த கோபத்தை எப்படியாவது கக்க வேண்டும் என்பதற்காக எழுத்துக்களை வடிக்கவில்லை. இது என்னோடு மட்டும் நிகழ்வுற்ற ஆறம்பம் கிடையாது. இலங்கையின் பல ஊர்களில் தப்லீக் வகைராக்களின் எல்லை மீறிய ரவ்டிச நடவடிக்கைகளினால் ஏற்பட்ட வடுக்கள் இன்றளவும் வரலாற்றில் சான்றுபகர்ந்து கொண்டிருக்கின்றன.
 
இத்தகைய வரம்பு மீறிய அனாமோதய ரவ்டிச பாணியை தப்லீக் ஜாமாத்தினர்கள் கைவிடல் வேண்டும். மட்டுமல்லாமல் தப்லீகின் சீர்திருத்தக் கட்டுமானப்பணி குறுகிய வட்டதிற்குள் சுருக்கப்பட்டு இறை நம்பிக்கையை உள்ளத்தில் ஆழமாக ஊடுருவி பதியச்செய்யும் எவ்வித ஆக்கபூர்வமான வழி நடத்தல்களும் அற்ற வெறும் பெரியார்களின் பெயரில் கட்டவிழ்த்துவிடப்பட்ட கப்சாக்களை உள்ளத்திற்கு உறமூட்டும் வங்குரோத்து மார்க்கப் பிரச்சாரத்தை செய்வதை விட்டும், புனித உரைகளின் அடிப்படையில் மாத்திரம் எடுத்து பிரச்சாரம் செய்வதோடு, புனித உரைகளின் பிரச்சார படினிலைகளை சரியாக இணங்கண்டு பிரச்சார வீச்சை ஒழுங்குபடுத்த வேண்டும்.
 
எது எவ்வாறாக இருந்தாலும் எதிர் விமர்சனங்களை சகிப்புத்தன்மையுடன் தலைக்கணம் என்ற தலைக்கவசத்தை கழற்றி விட்டு அவற்றை அறிவுபூர்வமாக அணுகி வன்முறைப்போக்கை, ரவ்டிச பாணியை முற்றுமுழுதாக கைவிட வேண்டும் என்பதே இவ்வாக்கத்தின் பணிவான வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.
 
 
 
 

2 comments:

Unknown said...

assalamu alaikum dear
kalyanam mudithawarhal aahakkooodiyazu oru thadawaiyil 4 month than poha mudium. oruwar seiza thawarukkaha mulu iyakkathaiyum kutram solwazu nyayama?
oru sila muslim theewirawaazi enbazarkkaha mulu muslimgalaiyuim theewirawaazi enru solfawarhalukkum ongalukkum enna withiyasam?
oruwar seiza thawarukkaha oru iyakkathai kutram solwazendral ulahil anaithu iyakkathitkum kutram solla weandum.


onraippatriya theliwu illamal wimarsanam seiwazai thawirndu kollungal

mk yasir said...

வஅலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்....

இச்சம்பவம் என்னோடுதான் ஆறம்பம் என்றிருந்தால் இவ்வாக்கத்தை எழுத கடுவளவேனும் எண்ணியிருக்க மாட்டேன். ஆனால் வரலாறு நெடுகிலும் தப்லீக்கிற்கு எதிரான கருத்துக்களை ரவுடிச வன்முறை ரீதியில் அடக்க முற்பட்ட சம்பவங்களின் தொடராகவே எனது குறித்த சம்பவமும் வரலாற்றில் இணைகிறது.
எனவே,
இப்படி தொடர்கதையாக தொடரும் தப்லீக்கை சுமந்தவர்களின் அட்டகாசங்கள் தனி ஒருவரின் தவறாக மட்டும் அடையாளப்படுத்துவது அறியாமை கலந்த புரிதலேயாகும்.

இது, குறித்த அந்த நபரின் பிழையல்ல. சீர்திருத்தத்தை குறுகிய சிறு வட்டத்திற்குள் சுருக்கி அதற்கு உள்ளே மாத்திரம் உறைய வைத்து மூலை சலவை செய்கின்ற தப்லீக் ஜமா அத்தின் சீர்திருத்த உட்கட்டமைப்பு பலவீனத்தையே எடுத்துகாட்டுகிரது. இதனை சீர்செய்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதுவே இவ்வாக்கம் வேண்டி நிற்கிறது.

Post a Comment