ஒருவரின் பேச்சு, எழுத்து, நடத்தை, நடவடிக்கை, போங்கு போன்றவைகள் சமூக கட்டமைப்பை தகர்க்கும் அல்லது அச்சுறுத்தும் என்ற நிலையை தோற்றுவிக்குமானால் தயவுதாட்சணமின்றி, காய்தல் உவர்த்தல் இன்றி அவைகளை சமூக மட்டத்தில் மேற்கோள் காட்டி விழிப்புணர்வூட்டப்படுவது இன்றியமையாதது.
நடு நிலை வாதிகள் இதில் பூசி மெழுகி தளர்வுத் தன்மையை கடைபிடிப்பதானது பல வழிகளிள் பிழையான அணுகுமுறையாகும்.
அவையாவன,
1. மார்க்க கட்டளைக்கு முரண்
2. சமூகம் பற்றிய தப்பபிப்ராயங்களுக்கு வழி கோணல்
3. தீமை, கூடாது, பிழை போன்றவைகளில் அசமந்தப் போக்கு
4. அசமந்தப் போக்கின் மேலீட்டால் ஆன்மீக வறுமைக்கு ஆள்பட்டு தாந்தோன்றித்தனம் மேலோங்கல்..
இது போன்ற இன்னோரன்ன பல பாதக தன்மைகள் சமூகத்தை தொற்றிக் கொள்ளும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
மேழும், நடுநிலை கூப்பாடுகளின் எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் இப்பாதக பண்புகளின் மொத்த வடிவத்தையாவது அல்லது அதன் எச்சசொச்சங்களையாவது மிக லாபகமாக கண்டு கொள்ளலாம்.
இன்று சமூக அச்சுறுத்தல் சமிஞ்சைகளை சமூக கட்டமைப்பின் எதிர் விளைவுகளிலிருந்து பாதுகாக்க எடுக்கும் நகர்வுகளும் பலதரப்பட்டவை.
எல்லா வர்கத்தினரிலும் சில அனாமோதய வரம்பு மீறிய கடுபோக்காளர்கள் இருப்பது போன்று சமூக விழிப்புணர்வு முயற்சிகளை வன்முறை பாங்கில் (பேச்சிலோ, எழுத்திலோ, செயலிலோ) கடித்துக் குதறும் சாரர்களும் இல்லாமலில்லை.
வரம்பு கடந்த நடத்தைகள், அறுவருக்கத்தக்க சொல்லாட்சி, கருத்துக்களை வலிந்து திணிக்கும் வரட்டு வக்கிரமப் போக்கு, உணர்ச்சிவசப்பட்ட முன்கோப நடவடிக்கைகள் போன்றவைகள் எரிகிற தீயில் இன்னும் எண்னெய் வார்ப்பதற்கே ஒப்பானது.
இவ்வாறனவர்களின் மேற்குறித்த எதிர்மறை விழிப்புணர்வு நகர்வுகளில் சம்பந்தப்பட்ட விமர்சன நபரும் அதில் பங்கெடுத்து அதை அதே பாணியிலே எதிர்கொண்டு செயலாற்றும் காட்சியையே கண்டு வருகிறோம். குறைக்கிற நாயை பார்த்து குறைக்கும் வடிக்கட்டிய அறியாமையே இதற்கு காரணம். இதில் வேண்டத்தகுந்த, பதிலளிக்க வேண்டிய அறிவுபூர்வமான விமர்சனங்கள் வெறுமனே கண்டுகொள்ளாமல் அனாதையாக்கப்பட்டு வருகிறமையும் மிகவுமே கவலைக்குறியது.
விமர்சிக்கின்றவர், விமர்சனத்தை எதிர் கொள்கின்றவர், எதை முன்னிறுத்த வேண்டும்? எதை புறக்கணிக்க வேண்டும்? என்கிற புரிதலின் அறிவின்மையையே சமூக மறுமலர்ச்சி கேள்விக் குறியாவதற்குறிய பிறதான காரணமாக எடை போடலாம்.
No comments:
Post a Comment