2 Jun 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் : 03

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)
ஆசிரியர் : இமாம் ஷவ்கானி
மரணம் : ஹிஜ்ரி 1250
விரிவுரை : அஷ்ஷேய்க் முஜா
ஹித் இப்னு ரஸீன்
தொகுப்பு : எம்.கெ. யாஸிர்
தொடர் : 03

மாதவிடாய்
*****************
• மாதவிடாயுடைய காலப்பகுதியை பொருத்தவரையில் அதனுடைய குறைந்த நாள் அளவென்ன கூடிய நாள் அளவென்ன என்பதில் சொல்லத்தக்க அளவில் எந்தவித ஆதாரமும் இல்லை. அதே போன்றுதான் சுத்தம் என்பதும் வரையரை கிடையாது.
• நிலையான வழமைக் கொண்ட பெண் அதற்கு ஏற்றாற் போல் செயற்பட வேண்டும்.
• வழமையை தீர்மானிக்க முடியாத பெண்கள் அவங்களுக்குறிய துணை அடையாளங்களை வைத்து செயற்பட வேண்டும். பெண்களுக்குத் தெரியும் மாதவிடாய் இரத்தம் ஏனைய இரத்தத்தை விட வித்தியாசப்படும்.
• ஒரு பெண் மாதவிடாய் பெண்ணாக எப்பொழுது மாறுவாள் என்றால், மாதவிடாய் இரத்தம் அவர்கள் அறிந்த அமைப்பில் எப்போது வருகின்றதோ அப்போதிலிருந்து மதாவிடாய் பெண்ணுக்குறிய மார்க்க சட்டத்திற்குள் நுழைகின்றாள்.
• மேலதிக உதிரப்போக்குள்ள பெண்ணை பொறுத்த வரை அவளுக்கு தெரியும் இந்த இரத்தம் மாதவிடாய் இரத்தத்தை விட வித்தியாசமானது என்று. எனவே மேலதிக உதிரப்போக்குள்ள பெண்ணுக்குறிய சட்டத்திகுள் அவள் நுழைகின்றாள்.
• மேலதிக உதிரப்போக்குள்ள பெண்ணின் சட்டம்; இரத்ததையும் அதன் அடையாளத்தையும் கழுவிக் கொள்ளல் வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூ செய்து கொள்ள வேண்டும்.
மாதவிடாய் பெண்கள் செய்யக் கூடாதவை
**********************************************************
• தொழக் கூடாது
• நோன்பு வைக்கக் கூடாது
• சுத்தத்துக்குப் பின்னால் குளிக்கும் வரைக்கும் குடும்ப உறவில் ஈடுபடக் கூடாது (கருத்து முரண்பாடு உள்ள விடயமாகும் மாதவிடாய் இரத்தம் நின்று விட்டாலே குடும்ப உறவில் ஈடுபட முடியும் என்பதே சரியானது)
• மாதாவிடாய் மூலமாக விடுபட்ட நோன்புகளை கலா செய்ய வேண்டும். தொழுகையை கலா செய்ய வேண்டியதில்லை.
பிரசவத் தீட்டு
********************
• இதனுடைய அதிக நாள் 40 நாட்களாகும்
• இதனுடைய ஆகக் குறைந்த அளவு என்பதற்கான எந்த வித ஆதரமும் இல்லை.
• மாதாவிடையுடைய சட்டம்தான் இதற்கும் உரியது
தொழுகை
---------------
தொழுகையுடைய நேரங்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
லுஹருடைய ஆரம்பம்
********************************
• சூரியன் உச்சியிலிருந்து சாய ஆரம்பிக்கும் நேரம்
• சூரியன் உச்சியிலிருந்து சாய ஆரம்பித்தல் என்பது நாம் சூரிய ஒளி படுகின்ற இடத்தில் இருக்கும் போது எமது நிழல் எம்மைச் சுற்றி சுருங்கி இருக்காமல் ஏதவது ஒரு பக்கத்தில் சாய்ந்து இருத்தலாகும்.
லுஹருடைய கடைசி / அஸருடைய ஆரம்பம்
*************************************************************
• ஒவ்வொரு பொருளுடைய நிழலும் குறித்த பொருடைய அளவிற்கு சமனாக வரும் நேரமாகும். ஆனால் சூரியனின் ஓட்டத்தின் காரணமாக ஏற்படும் சாய்வை கணக்கெடுக்கக் கூடாது.
அஸருடைய கடைசி நேரம்
************************************
• சூரியன் எதுவரைக்கும் இலங்கிக் கொண்டிருக்கக் கூடிய வெண்மையோடு இருக்கிறதோ அது வரைக்கும் அஸருடைய நேரம். அதனுடைய வெண்மைத் தன்மை சிவப்பாகவோ அல்லது இளம் சிவப்பாகவோ மாற ஆரம்பித்தால் அது அஸருடைய கடைசி நேரமாகும்.
மஹ்ரிபுடைய ஆரம்ப நேரம்
**************************************
• சூரியன் மறையும் நேரம்
மஹ்ரிபுடைய கடைசி நேரம் / இஷாவுடைய ஆரம்ப நேரம்
****************************************************************
• சிவந்த அடி வானம் அற்றுப் போய், வானம் முழுமையாக இருளாக இருக்கும் நேரமாகும்.
இஷாவுடைய கடைசி நேரம்
*************************************
• இரவுடைய நடுநிசியாகும். மஹ்ரிபுடைய நேரத்திலிருந்து பஜ்ர் ஆரம்ப நேரம் வரைக்குமான அரைப் பங்கு வரை இஷாவுடைய கடைசி நேரமாகும்
பஜ்ருடைய ஆரம்ப நேரம்
************************************
• நம்முடைய பகுதிக்கு முதன் முதலாக சூரியனின் வெளிச்சம் படுகின்ற நேரமாகும்.
பஜ்ருடைய கடைசி நேரம்
***********************************
• சூரியனுடை ஒரு கீற்று படுகின்ற நேரம். அதாவது சூரியன் உதிக்கும் நேரமாகும்.
 யார் தனது தொழுகையை விட்டும் தூங்கினாறோ அல்லது மறந்து விட்டாரோ அவருடைய வக்து நேரம் என்பது அவருக்கு ஞாபகம் வருகின்ற நேரமாகும்.
 யாருக்கு நியாயமான காரணத்தினால் தொழுகைக்கு சற்று நேரம் கடந்து விட்டால் அவருக்கு அந்தத் தொழுகையில் ஒரு ரக்ஆத் கிடைத்தாலும் முழு தொழுகையும் கிடைத்ததற்கு சமனாகும்.
 உரிய நேரத்திற்கு தொழுவது வாஜிபாகும். நேரத்திற்கு உட்பட்ட நேரத்தில் தொழுவதும் வாஜிபாகும்.
 நியாயமான காரணங்களுக்காக ஜம்ஊ (சேர்த்துத் தொழுதல்) செய்தல் அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஊரில் இருந்தாலும் சரி வெளியூரில் இருந்தாலும் சரி)
 தயம்மம் செய்தவரும், தொழுகையை முழுமையாக தொழ முடியாதவரும் அல்லது சுத்தத்தை முழுமையாக செய்ய முடியாதவரும் வக்து முடிகின்ற கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களும் உரிய நேரத்தில் தொழுவது வாஜிபாகும்.
தொழுவதற்கு வெறுக்கப்பட்ட நேரங்கள்
*******************************************************
 மக்காவைத் தவிர அனைத்து பிரதேசங்களுக்கும் வெறுக்கத்தக்க நேரங்களுக்குறிய சட்டம் பொருந்தும். (மக்காவைத் தவிர என்பது ஹதீஸ்களின் புரிதளுக்கு அப்பாற் பட்டதாகும். எல்லாப் பிரதேசங்களுக்கும் பொதுவான சட்டம் என்பதே சரியான கருத்தாகும்)
1. சூரியன் உதிக்கின்ற நேரம்
2. சூரியன் உச்சியில் இருந்து சாயும் வரைக்குமுள்ள நேரம்
3. அஸருக்குப் பிறகு சூரியன் சிவப்பாகவோ அல்லது இளம் சிகப்பாகவோ மாறி சூரியன் மறையும் வரைக்குமுள்ள நேரம்.

 

No comments:

Post a Comment