5 Jun 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் : 04

 
துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)ஆசிரியர் : இமாம் ஷவ்கானி
மரணம் : ஹிஜ்ரி 1250
விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்
தொகுப்பு : எம்.கெ. யாஸிர்
தொடர் : 04

அதான்
**********
• ஒவ்வொரு ஊரிலும் அதானுடைய வாசகங்களை மனனமிட்டு அதை சொல்வதற்குறிய நபரை ஏற்படுத்திக் கொள்வது மார்க்கக் கடமையாகும்.
• முஅத்தின் பாங்கு சொல்வதை அதே போன்று திருப்பிச் சொல்வது அதை கேட்கின்றவருக்குச் சுன்னாவாகும்.
• இகாமத் சொல்ல வேண்டிய முறைப்படி சொல்வது கடமையாகும் (ஹதீஸில் அதான் மாதிரியே கதுகாமத்திஸ்ஸலா இரண்டு முறை சொல்வதும் அல்லது அதான் மாதிரியே அனைத்தும் ஒரு முறை சொல்லி கதுகாமத்திஸ்ஸலா இரண்டு முறையும் ஆரம்பத்திலும் கடைசியிலும் அல்லாஹு அக்பர் இரண்டு முறை சொல்வதும் சொல்லப்பட்டுள்ளது) 
 
(((குறிப்பு))
 
((வாஜிப் (கட்டாயம்) 
 
• இபாதத்திற்கு உள்ளே உள்ள கட்டாயம் செய்ய வேண்டிய விடயங்கள். தொழுகையில் வாஜிப்களில் ஏதாவது மறந்து விட்டால் தொழுகை செல்லுபடியாகது என்ற நிலைக்கு செல்லாது. ஆனால் சஜ்தா சஹ்வு செய்ய வேண்டும். 
 
ஷர்த் (நிபந்தனை)
 
• இபாதத்திற்கு முன்னாலும் பின்னாலும் உள்ள விதிகள். இதில் ஒன்று விடுபட்டாலும் இபாதத் செல்லுபடியாகாது. உதாரணமாக தொழுகையில் வுழூ செய்தல், இடம் சுத்தமாக இருத்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்ற ஷர்த்துக்களில் ஏதாவது ஒன்று விடுபட்டாலும் குறித்த அந்தத் தொழுகையே திரும்ப மீட்டித் தொழ வேண்டும்.
 
றுகுன் (தூண்)
 
• இபாததிற்கு உள்ளே உள்ள பகுதிகள். இதில் ஒன்று விடுபட்டாலும் இபாதத் செல்லுபடியாகாது. உதாரணமாக ருக்ஃ, சுஜூத், சூரத்துல் பாத்திஹா, இருப்பு, இறுதி அத்தஹிய்யாத், முதல் ஸலாம் போன்ற றுகுன்களில் ஏதாவது ஒன்று விடுபட்டாலும் விடுபட்டிருந்த அந்த ர்க்ஆத்தை மீட்டித் தொழ வேண்டும். ))))) 
 
 
தொழுகையின் நிபந்தனைகள்
*******************************************
1. தொழுகின்றவரின் உடல், ஆடை, இடம் சுத்தமாக இருத்தல் (மார்க்கம் சொல்லக் கூடிய நஜீஸிலிருந்து சுத்தமாக இருப்பதனைக் குறிக்கும்)
2. அவ்ரத்தை மறைத்து இருத்தல்
பெண்கள் முகம் மற்றும் மணிக்கட்டு வரை இரண்டு கைகள் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் மறைத்து இருத்தல் வேண்டும் இரு கால்கள் உட்பட. சுஜூதிற்கு செல்கின்ற நேரத்தில் கால் பாதம் தெரிவதில் தவறு இல்லை.
ஆண்களின் அவ்ரத்தை பொருத்தவரையில் தொப்புளில் இருந்து முட்டங்கால் வரைக்கும் என்பது போன்ற அனைத்து விதமான அறிவிப்புகளும் பலவீனமானதாகும். மக்களுக்கு மத்தியில் அருவருப்பாக, அசிங்கமாக நோக்கப்படுகின்ற எல்லை வரைக்கும்தான் ஆண்களின் அவ்ரத்தாகும். இடுப்பு பகுதியிலிருந்து தொடைப் பகுதி வரைக்குமான பகுதியை ஆண்களின் அவ்ரத் என்ற முடிவுக்கு வரலாம்.
3. சம்மா என்ற ஆடை முறை அணிந்து தொழக் கூடாது. சம்மா என்றால் ஒரே ஒரு துணியால் முழு உடலையும் சுற்றி அணிதலை குறிக்கும். இந்த ஆடை அணியும் முறை தொழுகையல்லாத நேரத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது.
4. தோளில் மேல் போடும் துணியை தொங்க விட்டுக் கொணடு தொழக் கூடாது. ஏதாவது ஒரு பகுதியை தோளிள் போட்டுக் கொள்ள வேண்டும். சுஜூத் மற்றும் ருகூஃவிற்கு செல்லும் போது தோளில் இருந்து விலகுவதில் தவறு இல்லை.
5. ஆண்கள் கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிந்து தொழக் கூடாது.
6. ஆண்கள் முடி மற்றும் ஆடையை மடித்துக் கட்டிக் கொண்டு அல்லது மடித்துக் கொண்டு தொழக் கூடாது.
7. ஆண்கள் பட்டாடை அணிந்து தொழக் கூடாது.
8. மக்கள் ஆச்சரியப்படத்தக்கதான விசித்திரமான ஆடைகளை அணிந்து தொழக் கூடாது.
9. திருடப்பட்ட ஆடையில் தொழக் கூடாது.
10. வுழூ செய்து கொள்ளல்
11. கஃபாவை முன்னோக்குதல்
தொழுகையின் முறைமை
***********************************
1. தொழுகின்ற தொழுகை, தொழுகை என்று ஏற்றுக்கொள்ளப்படும், அந்தத் தொழுகைக்குறிய நிய்யத் இருக்கின்ற வரைக்குமாகும்.
2. தொழுகையிலுள்ள றுகுன்களெல்லாம் செய்து ஆக வேண்டும். இரண்டாவது ரக்காத்துக்காக உட்காருவதும், நான்காவது ரக்காத்துக்காக உட்காருவதும், நடு இருப்பும் றுக்குன்கள் அல்ல.
3. தொழுகையில் ஓதப்படும் திக்ருகளை பொறுத்தவரை அல்லாஹு அக்பர் சொல்லுதல், சமியல்லாஹு லிமன் ஹமிதா சொல்லுதல் (மஃமூமாக இருந்தால் றப்பனா வலகல் ஹம்த் சொல்லுதல்) மற்றும் அத்தாஹிய்யாத் ஓதுதலைத் தவிர மற்ற அனைத்தும் சுன்னாவாகும்.
4. ஒவ்வொரு ரக்காத்திலும் சூரத்துல் பாத்திஹா கடமை. பாத்திஹா இல்லாத ரக்காத் செல்லுபடியாகாது. இமாம் மௌனமாக இருக்கும் தொழுகை மற்றும் ரக்காத்துக்களில் மஃமூமாக இருந்தாலும் சூரத்துல் பாத்திஹா கடமையாகும்.
5. கடைசி அத்தஹிய்யாத் மற்றும் ஒரு ஸலாம் கொடுத்தல் நிபந்தனையாகும்.
6. நான்கு இடங்களில் கைகளை உயர்த்துதல் சுன்னாவாகும்.
7. வலது கையை இடது கையில் வைத்தல் சுன்னாவாகும். (வாஜிப் என்பதே சரியான கருத்தாகும்)
8. முதல் தக்பீருக்குப் பின்னால் இஸ்திப்தாஹ் ஓதுதல் மற்றும் சூராக்களுக்கு முன்னர் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடுதல் சுன்னாவாகும். (சூராக்களுக்கு முன்னர் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடுதல் வாஜிப் என்பதே சரியான கருத்தாகும்)
9. மஃமூன்கள் ஆமீன் சொல்வது சுன்னாவாகும் (இமாம் ஆமீன் சொன்னாலே தவிர மஃமூன்கள் ஆமீன் சொல்வது வாஜிபாகாது)
10. பாத்திஹா அல்லாத சூராக்களை ஓதுவது சுன்னாவாகும்.
11. நடு அத்தஹிய்யாத் சுன்னாவாகும். (வாஜிப் என்ற கருத்தே சரியானதாகும்)
12. தொழுகையில் இயலுமானவரை துஆக்களை அதிகரித்துக் கொள்ளல் வேண்டும். வந்த வராத உலக, மறுமை நலவுகளை கேட்கக் கூடிய துஆக்களை அதிகரித்துக் கொள்ளல் வேண்டும்.

No comments:

Post a Comment