30 May 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் : 01



 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)

ஆசிரியர் : இமாம் ஷவ்கானி

மரணம் : ஹிஜ்ரி 1250

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர்

தொடர் : 01

 

சுத்தம்

தண்ணீரின் வகைகள்

1. சுத்தமானது
2. சுத்தப்படுத்தக் கூடியது
தண்ணீர் எப்போது அசுத்தமாக மாறும்?
• இஸ்லாம் அசுத்தம் என்று சொல்லக்கூடிய ஒரு பொருள் கலந்து தண்ணீருடைய நிறத்தையோ, சுவையையோ, வாசத்தையோ மாற்றினால்..
• தண்ணீர் சுத்தப்படுத்தக் கூடியது என்பதிலிருந்து சுத்தமானதிற்கு மாறக் கூடியது.
உ+ம் : சுத்தமான மற்றும் சுத்தப்படுத்தக் கூடிய தண்ணீரில் சவர்காரமோ அது சார்ந்த ஏதாவது ஒரு பொருளோ கலந்து விட்டால் சுத்தப்படுத்தக் கூடியது என்பதிலிருந்து சுத்தமானதிற்கு மாத்திரம் மாறிவிடும். எனவே இந்த தண்ணீரில் வுழூ செய்ய முடியாது..
• இந்த சட்டத்திற்கு தண்ணீரின் அளவிலோ, ஓடக் கூடிய மற்றும் தேங்கி நிற்றல் அடிப்படையிலோ அல்லது பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத நிலையிலோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
 

நஜீஸ்

1. மனிதனுடைய மலம் சலம்
பால் குடிக்கக் கூடிய மற்றும் சாப்பிட முடியாத கைக் குழந்தைகளின் சிறுநீர் அசுத்தம் கிடையாது.
2. நாயுடைய எச்சில்
3. கழுதை, குதிரை, கோவேரிக் கழுதையின் விட்டை
4. மாதாவிடாய் இரத்தம்
5. பன்றி
இதுவல்லாத எல்லாவற்றிலும் கறுத்து முரண்பாடுகள் இருக்கின்றன.
• எல்லாவிடயங்கலிலும் அசல் சுத்தமானது. அசுத்தம் என்பதற்குதான் ஆதரபூர்வமான ஆதாரம் இருக்க வேண்டும். (ஹலால், ஹராம் விடயத்திலும் இதேதான்)
 

அசுத்தம் பட்டு விட்டால் எப்படி சுத்தப்படுத்துவது?

1 தண்ணீரால் கழுவுவதன் மூலம்
• பட்ட அசுத்தம் முழுமையாக நீங்கி விட வேண்டும்
• அசுத்தத்தின் காரணமாக இருந்த நிறம், சுவை, வாசம் நீங்க வேண்டும்.
2 செறுப்பில் பட்ட அசுத்தத்தை மண்ணில் தேய்ப்பதன் மூலம் சுத்தப்படுத்த முடியும்.
3 ஒன்றிலிந்து இன்னொன்றுக்கு மாறுதல்
• அசுத்தம் பட்ட பொருள் ஒன்று அதுவாகவே அதனுடைய நிறம், சுவை, வாசம் உட்பட அசுத்ததின் அடையாளம் முழுமையாக நீங்குதல்.
உ+ம் செத்த ஆடு சிறிது காலத்திற்கு பிறகு உப்பாக மாறுதல்
4 தண்ணீரை ஊற்றி அசுத்தம் அகளும் வரை கழுவுதல், தண்ணீரை இறைத்து சுத்தப்படுத்தல். அசுத்தத்தின் நிறம், சுவை, வாசம் அற்றுப் போகும் வரை..
5 சுத்தப்படுத்துவதில் அசல் தண்ணீர்தான். தண்ணீருடைய நிலைக்கு வேறொன்றும் சமனாகாது. சுத்தப்படுதுவதற்கு தண்ணீர் அல்லாத வேறொன்றுக்கு தெளிவான் ஆதாரம் இல்லாத வரையில்.
6 நாய் பாத்திரத்தினுல் வாய்விட்டுக் குடித்தால் ஏழு முறை அல்லது எட்டு முறை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். அதில் ஒரு முறை மண் போட்டு கழுவ வேண்டும். 
 

இயற்கைத் தேவையை பூர்த்தி செய்தல்

1. பூமியை நெருங்கும் வரை தன்னை மறைத்துக் கொள்ளல்.
2. மக்களை விட்டு தூரமாகுதல் அல்லது மறைக்கப்பட்ட இடத்தில் நிறைவேற்றல்.
3. பேச்சை விட்டு விடுதல்.
4. சங்கையான விடயங்களை தவிர்ந்து கொள்ளல்.
5. மார்க்கமோ சமூக வழமையோ ஒன்றை தடுத்து இருந்தால் அவ்விடத்தில் நிறைவேற்றக் கூடாது. மக்கள் இருக்கின்ற இடங்கள், மர நிழல், வீதிகள் போன்றவற்றில் இயற்கைத் தேவையை நிறைவேற்றக் கூடாது என்று மார்க்கம் சொல்கின்றது.
6. நிறைவேற்றும் போது கிப்லாவை முன்னோக்குதல் பின்னோக்குதல் கூடாது.
7. தண்ணீரால் சுத்தப்படுத்துதல் அல்லது கற்களைக் கொண்டு மூன்று முறை சுத்தப்படுத்துதல். கற்களுடைய நிலையில் எதுவெல்லாம் உள்ளனவோ அவற்றைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம்.
8. போகும் பொழுதும் வரும் பொழுதும் துஆவை ஓதிக் கொள்வது சுன்னா

No comments:

Post a Comment