7 Apr 2015
முகநூலில் முலாம் இடப்பட்டிருக்கும் தனிநபர் தாக்குதல்கள்..
Labels:
விமர்சனம்
No comments:
29 Mar 2015
சஹாபாப் பெண்களின் சமூகப் பங்களிப்புகள்..
சஹாபாப் பெண்களின் சமூகப் பங்களிப்பின் கருத்தாளங்களை கட்டுரைப்படுத்த முன் முதலில் சமூகம் என்றால் என்ன? சமூக கட்டமைப்பில் உள்வாங்கப் படுபவர்கள் யார்? என்ற புரிதலுக்கான கேள்விகளுக்கு விடை தொடுக்க முனைகிறேன். தமிழ் அகராதியின் பிரகாரம் ஒரு குறிப்பிட்ட தொழில், துறை, இனம் முதலியனவற்றைச் சேர்ந்தவர்களின் தொகுதியை சமூகம் என வரையரைப்படுத்தலாம். மேற்குறிப்பிட்டவற்றைச் சார்ந்தவர்கள் அச்சமூக கட்டமைப்பில் உள்ளடங்குபவர்கள். ஏன் இதை தலைப்பிற்கு அப்பால் நின்று மிகவும் அழுத்தி விளங்கப்படுத்துகிறேன்? என்றால், சஹாபாப் பெண்களை பொருத்தமட்டில் எச்சமூகத்தை பிரதிபலித்து தமது பங்களிப்பை மேற்கொண்டார்கள்? என்ற வினாவிற்கு விடை காணல் வேண்டும். அதாவது அவர்களை சார்ந்து இருந்த கொள்கையான இஸ்லாமியச் சமூகம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக வேண்டிதான். மனித நேயம் கொண்டவர்கள் ஒட்டுமொத்த மனித சமூகத்தை பிரதிபலித்துத்தானே தமது பங்களிப்பை செய்திருக்க வேண்டும்.? ஏன் இஸ்லாமிய சமூகத்தை மட்டும் குறிவைத்து தமது பங்களிப்பை சுருக்கிக் கொண்டார்கள்? போன்ற கேள்விகள் எழுவதிலும் தவிர்க்க முடியாது.
Labels:
கட்டுரைகள்
No comments:
பணம் படுத்தும் பாடும்… இஸ்லாத்தின் இலகு வழியும்
"பணத்தை கண்டால் பிணமும் வாய் திறக்கும்" என்பது முதுமொழி. அதை சற்றே குறைவின்றி பிரதிபலிக்கும் விதமாக, பணம் இன்றைய மனிதனை அடிமைப் படுத்திருக்கின்றது. இன்று பணம் ஒருமனிதனிடத்தில் இல்லை என்றால் அவன் உலகத்தில் வாழ்வதில் அர்த்தமேயில்லை என்றளவிற்கு, பணம் உயிருக்கு நிகராக நோக்கப்படும் அவலம் மனிதனை பீடித்திருக்கிறது. ஏனென்றால் பணம் இன்று மனிதனுடைய அனைத்து அம்சங்களிலும் ஊடுறுவி செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதை மறுக்க முடியாது.
எனவேதான் மனிதன் பணத்துக்காக நாயாய், பேயாய் அலைகின்றான். அதை அடைந்து கொள்வதற்கு இரவு பகல், மழை வெயில் என்று பாராமல் தனது வாழ்க்கையே அரப்பணிக்கின்றான். மானம், மரியாதை, குடும்பம், குழந்தை, சொந்தம், பந்தம், வீடு, நாடு என்று அனைத்தையும் பணத்துக்காக வேண்டி துச்சமாக துறக்கின்றான். பொய், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், கலப்படம் என்று பஞ்ஞமா பாதகங்களையும் பணத்திற்காக பயமின்றி செய்யத் துணிகின்றான். இத்தனைக்கும் தனக்கு பணம் கிடைத்தால் போதுமென்ற தப்பெண்ணம்தான் அடிப்படைக் காரணம். மட்டுமல்லாமல் கர்வம், பெருமை, மற்றவர்களை மட்டம் தட்டல், தற்பெருமை பாரட்டல், கஞ்ஞத்தனம் போன்ற கூடாத துர் குணங்களாளும் பணம் மனிதனை ஆட்டிப்படைத்து விழுங்கிவிட்டிருக்கின்றது. பணம் அளவு கடந்து இருப்பவர்கள், பணம் அளவோடு இருப்பவர்கள், பணத்திற்காக திண்டாடுபவர்கள் என்று அனைத்துத் தரப்பினர்களும் பெரும்பாலும் பணத்தின் காரணமாகத்தான் தனது மானிடப் பண்புகளையெல்லாம் மறந்து மிருகங்களை விட கேவலமானவர்களாக மாறிவிடுகின்றனர்.
Labels:
கட்டுரைகள்
No comments:
முரண்பாடும் உடன்பாடும்
[முரண்பாட்டின் தோற்றம்]இந்த நூற்றாண்டு மட்டுமல்ல வரலாறு நெடுகிலும் முரண்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் நோக்கப்படுகிறது. மனிதனுக்கே உரிய சில பலவீனங்கள், துர் பண்புகள் முரண்பாட்டை தோற்றுவிக்கின்றன. பலவீனங்கள், துர் பண்புகள் நபருக்கு நபர் வேறுபடும் பொழுது சுயமாகவே முரண்பாடு தோற்றம்பெறுகிறது. மனித பலவீனம், துர் பண்பு என்ற அஸ்திவாரத்தில்தான் முரண்பாடு என்ற கட்டிடம் கட்டியமைக்கப்படுகிறது.
Labels:
கட்டுரைகள்
No comments:
25 Feb 2015
அன்பான அழைப்பு..
அல்லாஹ் அல்லாதவைகளை அவனின் இடத்தில் வைத்து அவைகளை கடவுள் நிலைக்கு உயர்த்தும், அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவமாக இணைவைப்பு கருதப்படுகிறது. இதற்கு முற்றிலும் எதிராக அழைப்புப்பணியை மேற்கொள்வது
ஒவ்வொரு முஸ்லிமினதும் தாரகமந்திரமாகவும், அத்தியவசியமானதும், எல்லாவற்றையும் தாண்டி முதன்மையானதாகவும் இருத்தல் வேண்டும்.
மேலும் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் நபி (ஸல்) அவர்கள் வரை உலகிற்கு அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் ஓரிறைக் கொள்கையை, ஷிர்க்கிற்கு எதிரான தமது உச்சகட்ட பிரச்சாரத்தை உயிரையும் துச்சமாக மதித்து மேற்கொண்டார்கள். அன்றைய சமூகத்தினரிடயே காணப்பட்ட, கடவுள் தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் அனைத்து ஷிர்க்கான காரியங்களிற்கும் எதிராக குரலை உயர்த்தினார்கள். ஒட்டுமொத்த நபிமார்களும் ஓங்கி ஒலித்த கொள்கை முழக்கத்தை, அவர்களுக்கு பின் தொடர்சியாக அவர்களின் முன்மாதிரிகளை பின்பற்றும் ஒவ்வொரு தனி நபர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் முதன்மையாகவும், தீவிரமாகவும் பற்றிப்பிடித்து உயரிய சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை செய்ய வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் இன்றியமையாததாகும்.
ஒவ்வொரு முஸ்லிமினதும் தாரகமந்திரமாகவும், அத்தியவசியமானதும், எல்லாவற்றையும் தாண்டி முதன்மையானதாகவும் இருத்தல் வேண்டும்.
மேலும் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் நபி (ஸல்) அவர்கள் வரை உலகிற்கு அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் ஓரிறைக் கொள்கையை, ஷிர்க்கிற்கு எதிரான தமது உச்சகட்ட பிரச்சாரத்தை உயிரையும் துச்சமாக மதித்து மேற்கொண்டார்கள். அன்றைய சமூகத்தினரிடயே காணப்பட்ட, கடவுள் தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் அனைத்து ஷிர்க்கான காரியங்களிற்கும் எதிராக குரலை உயர்த்தினார்கள். ஒட்டுமொத்த நபிமார்களும் ஓங்கி ஒலித்த கொள்கை முழக்கத்தை, அவர்களுக்கு பின் தொடர்சியாக அவர்களின் முன்மாதிரிகளை பின்பற்றும் ஒவ்வொரு தனி நபர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் முதன்மையாகவும், தீவிரமாகவும் பற்றிப்பிடித்து உயரிய சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை செய்ய வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் இன்றியமையாததாகும்.
Labels:
விமர்சனம்
No comments:
13 Feb 2015
பெப்ரவரி 14: காதலர் தினமா? காமுகர் தினமா?
.jpg)
வருடா வருடம் பெப்ரவரி 14ஆம் திகதி உலகலாவிய ரீதியில் காதலர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. காதலுக்கு மரியாதை, காதலில்லா உலகமில்லை, காதல் செய் காவியம் படைக்கலாம் போன்ற தொனிப்பொருள்களின் கீழ் உலகின் பல நாடுகளிலுமுள்ள காதல் மன்னர்கள், காதல் அபிமானிகளால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுவருகின்றது. வருடத்தில் கொண்டாடப்பட்டு அனுஷ்டிக்கப்படும் அன்னையர் தினம், ஆசிரியர் தினம், சிறுவர் தினம் போன்ற தொடச்சியில் காதலர் தின கொண்டாட்டத்தின் நோக்கமும், முதலாலித்துவ கோட்பாட்டு முதலைகளின் வர்த்தக மயமாக்கலேயென்றால் அதில் மிகையில்லை. மேலும் காதலர் தினம் மனிதனின் இயல்பான கதலுணர்வை பிரதிபலித்து காத்திரமான ஒரு கட்டுக்கோப்பான அளவுகோளுடன் கொண்டாடப்படக்கூடிய நாளாக அனுஷ்டிக்கப்படுமானால் அதில் ஓரளவு நியாயம் உண்டு. ஆனால் காதலர் தினம் உறுச்சிதைந்த சிலையாக காமுகர் தினமாக உருமாற்றப்பெற்று சமூகச் சீரழிவை நோக்கிய அடிச்சுவடுகளை பதியவைத்துள்ளது.
Labels:
சமூகம்,
விமர்சனம்
No comments:
23 Dec 2014
வாக்களிப்பை உதாசீனப்படுத்திவிடாதீர்கள்!
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சி இருக்கின்றன. கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களை போன்றல்லாமல் இம்முறை முஸ்லிம்களுக்கு மிகவுமே சவால் மிக்க ஒரு தேர்தலாகவே நோக்கப்படுகிறது. ஏனென்றால் முஸ்லிம்களின் கடந்த கால காயங்கள் இன்னும் ஆராவில்லை. ஆரும் படியாகவும் இருக்கவில்லை. எனவே இத்தேர்தல் முஸ்லிம்களை பொறுத்த வரையில் தமது கைக்கு வந்த கடிவாளம் போன்று ஒருகை பார்க்க இருக்கிறார்கள் என்பதையே உணர்த்தி நிற்கிறது. இதனை வெறுமனே உதாசீனப் படுத்தி விட்டு கடிவாளம் கைமாறிப் போன பின் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி பயன் இல்லை.
Labels:
சமூகம்
No comments:





