18 Apr 2014

நல்லிணக்கம் எனும் போர்வையில் நசுக்கப்படும் சமுதாயம்.

இலங்கையின் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் ”நல்லிணக்கம்” என்ற சொற்பதம் பரவலாக எம் சமூகத்திற்கு மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. அதேபோல் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, தாராளத்தன்மை போன்ற சொற்பதங்களும் ”நல்லிணக்கத்திற்கு” இணக்கமாக கையாளப்படுகின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் முற்றி முறுக்கேரி பற்றி எறிகின்ற இச்சூழ்நிலையில் இவ்வாறான சொற்பிரயோகங்களினால் அவற்றை அனைப்பதற்கு முயற்சிக்கும் நகர்வுகளாகவே தெரிகிறது. என்றாலும் இனவாத இரும்புக் கரம் இம்மியளவும் அடங்குவதாகத் தெரியவில்லை. இவ்வாறான சொற்பிரயோகங்கள் அவர்களுக்கு அடிபணிகின்ற அல்லது அச்சத்தின் வெளிப்பாடாகவே நோக்கப்படுகிறது, என்றால் அவர்களின் உத்வோகமே இதற்கு சான்று. 


ஏனென்றால் அவர்களின் வரட்டு வாதங்களுக்கும், பொய் பிரச்சாரங்களுக்கும், அவதூறுகளுக்கும் வெறுமனே இவ்வாறான சொற்பிரயோகங்களால் தமது இயலாமையை வெளிப்படுத்துவது அவர்களின் மனபலத்திற்கு இன்னும் உரம் இடுவது போலாகும். அந்த உரங்களின் அசுற சக்தியின் வெளிப்பாடே சமீபத்திய நிகழ்வுகளின் வற்றாத தழும்புகள் என்றும் கூறலாம். குர்ஆனை இழிவு படுத்தியது, குர்ஆனில் இல்லாததை இருப்பதாக இட்டுக்கட்டியது, அல்லாஹ் என்ற வாசகம் அடங்கிய கொடும்பாவி எறிக்கப்பட்டது போன்ற நிறைய அட்டூளியங்களை பட்டியல் போடலாம். எம்மீது அவர்களுக்கு உள்ள அச்சம் நீங்கி தான்தோன்றித்தனமான திருவிளையாடல்களை சந்திக்குச் சந்தி திருப்பி விட்டிருக்கிறார்கள் என்றால் நமது பலவீனத்தை ஏணியாக எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் அதன் அர்த்தம்.

நல்லிணக்கத்தின் யாதார்த்த தன்மையின் வரைவிலக்கணத்தை சரியாக புரிந்து கொள்ளாததின் விளைவே, இன்று நல்லிணக்கம் என்ற போர்வையில் நசுக்கப்பட்ட இரண்டாம் தர குடிமக்களாக நம்மை நாமே அடையாளப்படுத்திக் கொள்கிள்ற நிலை உறுவாகியிருக்கிறது. உண்மையில் மேற்சொன்ன சொற்பதங்கள் ஒரு முஸ்லிமிடத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்திடமும் இருக்க வேண்டிய அடிப்படை அத்தியவசிய பண்புகள் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை. ஏனென்றால் இஸ்லாம் என்றாலே அமைதி, சாந்தி என்றே அர்த்தம். சாந்தியை சமாதானத்தை சுமந்து இருக்கின்ற இஸ்லாம் ஒருபோதும் இவ்வாறான பண்புகளை தட்டிக் கழிக்காது. என்றாலும் கூட சில பண்புகள் இடத்திற்கு இடம், சூழழ், தன்மைகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடியது. ஒரு ஆரோக்கியமான பண்பு ஒரு சில இடங்களில் அல்லது சூழநிலைகளில் எமக்கு அதுவே பாதகமாக அமையும். அதே போன்று ஒரு ஆரேக்கியமற்ற பண்பு  ஒரு சில இடங்களில் அல்லது சூழ்நிலைகளில் எமக்கு அதுவே சாதகமாகவும் அமையும். உதாரணத்திற்கு ”கோபம்” என்ற பண்பு ஆரோக்கியமற்ற பண்பு. இந்த பண்பு தனது பிள்ளை தொடர்ச்சியான ஒரு பாவமான காரியத்தை செய்கின்ற பொழுது திருத்துவதன் நோக்கத்துடன் வெளிப்படுத்தப்படாவிடின் பிள்ளை அந்தப் பாவச் செயலை அச்ச உணர்வின்றி மீண்டும் செய்வதற்கு தயங்காது. இந்த இடத்தில் தற்காலிக ஒரு கோபம் தேவைப்படுகிறது. அதே போல் ”விட்டுக்கொடுப்பு” என்ற அழகிய பண்பு சமூக உரிமைகள் என்று வருகின்ற பொழுது அவற்றை வெறுமனே விட்டுக்கொடுத்துவிட முடியாது. இந்த சூழ்நிலையில் இக்குணாம்சம் தவிர்க்கப்பட வேண்டியவை. அதே தனது சொந்த விடயங்கள் என்று வருமானால் விட்டுக் கொடுத்தல் அழகிய பண்பாக நோக்கப்டும். எனவே சில பண்புகள் அதன் சூழழ், காரணிகள், தன்மைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கக் கூடியவை. எனவே நல்லிணக்கம் பேசும் நலன்விரும்பிகள் சம்பந்தம்மில்லாத ஒன்றை ஒன்றுடன் ஒன்று மொட்டைத் தலைக்கும் முடங்காளுக்கும் முடிச்சு போடுவதை சற்று நிறுத்தி தீரவக்கான சரியான வழிகாட்டுதளை வழங்க வேண்டும்.  நல்லிணக்கக் கேஷங்கள் தற்போதுள்ள சூழ்நிழையில் தேவையில்லாத இன்னும் சொல்லப் போனால் அர்தம் இல்லாதவொன்று. எனவே நல்லிணக்கத்தின் ஆழ்ந்த, விரிந்த பலநோக்ககுக் கண்ணோட்டத்துடன் அதன் யதார்த்த தன்மையுடன் வரைவிலக்கணப்படுத்தி புரிந்து கொள்வோமாயின், அதன் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும். 

நல்லிணக்கம் என்றால் என்ன?

பல்வேறு அமைப்புகளின் அடிப்படையில் வேறுபடுகின்ற இரு சாராரருக்கு மத்தியில் ஏற்படுகின்ற புரிந்துணர்வுடன் அல்லது சகிப்புத்தன்மையுடன் கூடிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் எனலாம். உதாரணமாக இரு வேறு மொழி பேசக்கூடிய இரு சாரார் நல்லிணக்கத்துடன் உறவாட வேண்டுமென்றால் ஒரு சாராருடைய மொழியை விட்டுக்கொடுத்து ஒரு மொழிக்கு ஒருமைப்பட்டால் மாத்திரமே அங்கு நல்லிணக்கத்துக்கான சாத்தியம் ஏற்படும். சுருங்கச் சொன்னால் பன்முகத்தன்மையிலிந்து ஒருமுகத்தன்மைக்கு வருவது. வேறு படுகின்ற தன்மைகளின் அடிப்படையில் நல்லிணக்கத்தை பல்வேறு வகைகளாக பிரித்து நோக்கலாம். 

இன நல்லிணக்கம்

பல்வேறு இனத்தவர்கள் வாழ்கின்ற எமது நாட்டில் இன நல்லிணக்கம் என்பது அடிப்படை அத்தியவசியம். இனங்கள் ரீதியாக உள்ள வேறுபாடுகளை மறந்து நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற ஒருமைப்பாட்டுடன் இனநல்லிணக்கத்தை பேணுவது கட்டாயம். இன நல்லினக்கம் என்பது பல இனத்தவர்களுக்கு மத்தியில் புரிந்துணர்வோடும் சகவாழ்வோடும் அன்னியோன்யமாக பழகுவதை குறிக்கும். அதே நேரத்தில் இவ்வினங்களின் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் அவர்களின் உடை, மதம், கலாச்சாரம் என்பவற்றில் எவ்வித தாக்கமும் செலுத்தாது.  என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். 

மத நல்லிணக்கம்

மேற்சொன்ன வரைவிலக்கனத்தின் அடிப்படையில் இரு வேறுபட்ட மதங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை கொண்டு வரலாமா? என்ற கேள்விக்கான விடையையும் ஆரய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏனென்றால் சில பேர் அறிந்தோ அறியாமலோ ”மத நல்லிணக்கம்” என்ற கோஷ முலக்கத்துடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இஸ்லாம் மார்க்கத்தை பொறுத்த வரையில் மற்ற அனைத்து மதங்களையும் விடவும் தனித்தன்மை வாய்ந்தது. எனவே இஸ்லாம் மத நல்லிணக்கத்தை விரும்புகிறதா? என்றால் அதற்கு நிர்பந்தம் என்ற ஒன்றைத் தவிர கடுகளவேனும் அவகாசம் இல்லை என்பைதை புரிந்து கொள்ள வேண்டும். மதநல்லிணக்கக் கேஷத்தை யார் யாரெல்லாம் கூப்பாடு போடுகிறார்களோ அவர்கள் உண்மையில் ”எம் மதமும் சம்பந்தம்” என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டுதான் அப்படி கேஷமிட முடியும்.  அதே நேரத்தில் இஸ்லாம் வழியுருத்திச் சொல்கின்ற அழைப்புப் பணியை இந்த மதநல்லிணக்கத்தைக் கொண்டு ஒருகாளும் செய்யமுடியாது என்பதுதான் உண்மை. அல்லாஹ் தனது அருள் மறையில் இதற்கு சான்றாக இவ்வாறு கூறுகிறான்,

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு என்னுடைய மார்க்கம் (என்று முஹம்மதே கூறுவீராக!) 109:06

இனவாதத் தீயை நல்லிணக்கத்தை கொண்டு அனைக்கலாமா?

ஏட்டுச் சுறைக்காய் கறிக்கு உதவுமா? என்பது போல நல்லிணக்கம் பேசி இனவாத சக்திகளை ஒடுக்குவது என்பது வெறுமனே பகள் கனவுதான். நல்லிணக்கத்தையும் இனவாத அல்லது மதவாத சக்திகளின் அட்டகாசத்தையும் ஒன்றோடு ஒன்று முடிச்சி போட்டு தீர்வை தேடுவது என்பது சாவி துளைந்த இடத்தில் தேடாமல் வீட்டுக்குள் வெளிச்சம் இருக்கிறதே என்று வீட்டுக்குள் சாவியை தேடுவது போலாகும். நீண்ட நாட்கள் திட்டம் தீட்டி, நீண்ட கால குறிக்கோளுடன் வெட்ட வருகின்றவனுக்கு நல்லிணக்கம்  என்பது சாத்தியமே இல்லலை. இனவாதத்தை பரப்பும் விஷமிகள் பல குறிக்கோளுடன் பல வகையான திட்டமிட்ட சதிகளுடன் முஸ்லிம்களை கருவருக்கவே களம் கண்டு இருக்கிறார்கள். எனவே இவர்களின் அடாவடி அடக்குமுறைகள் எந்தவொரு நல்லிணக்கத்தாலும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒரு குழு தெரியாமல் இஸ்லாத்தைப்பற்றியோ அல்லது நமது சமூகத்தை பற்றியோ அறியாமல் குந்தகம் விளைவிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு நல்லிணக்கத்தை கொண்டு ஓரளவு சீர்படுத்தலாம். திட்டமிட்டு செய்யப்படுகின்ற இன்றைய இவ்வாறான இனரீதியான தாக்குதல்களுக்கு சட்டத்தைக் கொண்டு பதிலடி கொடுப்பதுதான் தீர்வுக்கான சரியான நகர்வு. நல்லிணக்கத்தை மையப்படுத்தி வெறுமனே தாரைவார்கும் சமூகமாக இருந்தால் இதன் பிரதிபலன் நம்முடைய வருங்கால சந்ததியினரை அதலபாதாலத்துக்கு தள்ளிவிடுகின்ற ஒரு சமூக துரோக வேலை என்பதை சற்று சிந்திக்க வேண்டும். 

நல்லிணக்க கோஷம் போடும் சூழ்நிலை அல்ல இக்கால சூழ்நிலை. அறிவார்ந்த ரீதியில் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது உரிமைகளை பாதுகாப்பதற்கான காலகட்டம். பள்ளிகளை உடைக்கும் நகர்வுகளுக்கு அப்பால் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கக் கூடிய நகர்வுகள் இப்போது விஸ்வரூபம் எடுக்க ஆறம்பித்திருக்கிறது. இதனை சட்டத்தைக் கொண்டு சர்வதேச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் சமூகத்தின் பிரதிநிதிகளாக இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் சமூகத்தை பிரதிபலிக்கும் உலமாக்கல், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என்று  அனைவரினதும் தார்மீக விதியாகவுள்ளது. நல்லிணக்கக் கோஷம் இன்றைய சூழ்நிலையில் எடுபடாத செல்லாக் காசு. அதை எந்தசூழ்நிலையில் யாருக்கு மத்தியில் எதனைக் கொண்டு செயல்படுத்த வேண்டுமோ, அவ்வாறான திட்டமிட்ட வகையில் மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு வழிநடத்துபவர்களிடம் இருக்க வேண்டும். அவ்வாறால்லாமல் இந்த வெற்றுக் கோஷங்களினால் பெறுமதிவாய்ந்த ஜூம்ஆக்கள் பால்படுத்துகின்ற குற்றத்திற்கு உள்ளாகிவிடுவோம் என்ற குற்ற உணர்வுடன் சிந்தித்து செயல்பட வேண்டும். அதே நேரம் இனவாதத்திற்கு எதிரான எமது நகர்வுகளில் ”நலினம்” என்ற மாறா பண்பு எச்சந்தர்ப்பத்திலும் மிளிர வேண்டும் என்பதையும் ஆழப்பதிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு உதவி புரிவானாக! 

அனைத்தயும் அல்லாஹ்வே அறிந்தவன்.

-MK YASIR-  

No comments:

Post a Comment