13 Feb 2021

ரஹ்மத்துல் ஆலமீன்

 

பிறர் நலம் பேணுவதில் நபியவர்களை மிஞ்சிய ஓர் மனிதப்புனிதரை இவ்வுலகில் சல்லாடை போட்டுத் தேடினாலும் யாருமே தேரமாட்டார்கள். மிதமிஞ்சிய குறுட்டுப் புகழ்சியால் உதிறும் வார்த்தைகளல்ல இவை. கீழ் வரும் ஹதீஸ் இதனை மெய்ச்சிலிர்க்க வைத்து நபியவர்களின் அப்பளுக்கற்ற வாழ்க்கையை பறைசாற்றுகிறது.
....மேலும், ஆயிஷா(ரலி) கூறினார். பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா(ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா(ரலி) அவர்கள் 'அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்' என்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் 'வராக'விடம் அழைத்துச் சென்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 3. ஹதீஸின் சுருக்கம்)
பலரும் தான் உழைத்ததில் ஒரு சில பகுதியைத்தான் வறியவருக்காக செலவு செய்வார்கள். ஆனால் வரியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வேண்டியே வியர்வைச் சிந்தி உழைக்கும் மக்களை காண்பது அறிதிலும் அறிது. ஆனால் நபியவர்கள் பிறரின் கண்ணீரை துடைப்பதற்காக வேண்டியே தன்னுடைய இரத்தத்தை வியர்வையாக சிந்தியிருக்கிறார்கள் என்றால் இதன் பெருமானத்தை பொன்னெழுதுக்களால் வடித்தாலும் ஈடாகாது.
வரலாற்றில் மிகவும் செல்வாக்குப் பெற்ற நபர்களை ஆய்வுக்குட்படுத்தி தரப்படுத்தும் 'The 100' என்ற புத்தகத்தில் நபியவர்களை ஆய்வுக்குட்படுத்தியதில் அவரை முதல் நிலைப்படுத்தாமல் இருப்பதற்கு ஒருகாளும் ஓர் நல்ல மனச்சாட்சி இடம்தரமாட்டாது என்ற ஒரே காரணத்தினால்தான் புத்தக ஆசிரியர் ஒரு கிருஸ்தவராக இருந்தும், முதலாவதாக நபிகள் நாயகத்தை பட்டியல் இடுகிறார்.
நபி (ஸல்) அவர்களை நமது தலைவர் என்று நெஞ்சு நிமிர்த்து பெருமையாக சொல்வதாக இருந்தால் அவர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் முறைமையை வாழ்வில் பின்பற்றாமல் இருப்பது தகுமா?