10 Jun 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 05

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)








ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 
மரணம் : ஹிஜ்ரி 1250 
விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்
தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 
தொடர் : 05


தப்பிப்போன தொழுகைகளை தொழுதல்

******************************************************** 

• ஒருவர் தொழுகையை வேண்டுமென்று விட்டிருந்தால் அல்லாஹ்வுடைய கடன்தான் நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதியானது. (வேண்டுமென்று விட்டவருக்கு தவ்பாவைத் தவிர கலா கிடையாது)

• நியாயமான காரணத்தோடு ஒருவருக்கு தொழுகை விடுபட்டால் அது கலாவே அல்ல. குறித்த காரணம் நீங்கிய பிறகு அவர் அந்த தொழுகையை நிறைவேற்றுகிறார். ஆனால் பெருநாள் தொழுகையை தவிர.


ஜும்ஆ தொழுகை

*************************

• பருவமைந்த எல்லோருக்கும் ஜும்ஆ கடமை நான்கு பேர்களைத் தவிர.

1. பெண்

2. அடிமை

3. பிரயாணி

4. நோயாளி

• ஜும்ஆவுடைய தொழுகைக்கும் மற்ற தொழுகைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை தொழுகைக்கு முன்னால் இரண்டு குத்பாக்களைத் தவிர. 

• ஜும்ஆவுடைய நேரம் லுஹருடைய நேரமாகும். 

• ஜும்ஆவுக்கு கலந்து கொள்ளக் கூடியவர் ஏனையவர்களின்  தோள்புஜங்களில் ஏறி ஏறி கடந்து செல்லக் கூடாது.

• இரண்டு குத்பாக்களையும் செவிமடுத்துக் கேட்க வேண்டும் 

• நேரத்தோடு சமூகமளிப்பது சுன்னா, வாசம் பூசிக்கொள்வது சுன்னா, அழகுபடுத்திக் கொள்வது சுன்னா, இமாமிற்கு நெருக்கமாக் இருப்பதும் சுன்னாவாகும். 

• குறைந்தபட்சம் ஒரே ஒரு ரக்காத்தில் முழுமையான ஒரு ருகுஃ கிடைத்தாலும் ஜும் ஆ கிடைத்த்தற்கு சமனாகும். 

• பெருநாள் தினமாக இருந்தால் ஜும்ஆ தொழுகை விரும்பத்தக்கதாகும். 


இரண்டு பெருநாள் தொழுகைகள் 

*********************************************

• பெருநாள் தொழுகை இரண்டு ரக்காத்துக்களாகும். முதலாவது ரக்காத்தில் கிராத்துக்கு முன்னர் (ஆரம்ப தக்பீர் தவிர்ந்த) ஏழு தக்பீர்களாகும். இரண்டாவது தக்பீரில் கிராத்துக்கு முன்னர் (ஆரம்ப தக்பீர் தவிர்ந்த) ஐந்து தக்பீர்களாகும். பின்னர் குத்பா செய்தல் வேண்டும். 

• அழகான ஆடைகளை அணிதல், ஊரை விட்டு வெளியே போதல் (திடலுக்கு), போகின்ற பாதையல்லாத வேறு பாதைகளில் திரும்பி வருதல், ஹஜ்ஜிப் பெருநாள் அல்லாமல் நோன்புப் பெருநாளில் சாப்பிட்டுச் செல்லல் போன்றவைகள் சுன்னாவாகும். (ஹஜ்ஜிப் பெருநாளில் சாப்பிடாமல் செல்லுதல் என்பது பலவீனமான ஹதீதாகும்)

• பெருநாள் தொழுகைக்கு அதானும் இல்லை இகாமத்தும் இல்லை. 

• நேரம் சூரியன் ஈட்டியளவிற்கு உயர்ந்து விடுவதுதான் இதனுடையா ஆரம்ப நேரமாகும். சூரியன் உச்சியிலிருந்து சாயும் வரைக்கும்தான் இதனுடைய கடைசி நேரமாகும்.


அச்ச நிலை தொழுகை

*******************************

• நபி (ஸல்) அவர்கள் இத்தொழுகையை ஒவ்வொருவிதமாக தொழுது இருக்கிறார்கள். இதில் எந்த முறைப்படி தொழுதாலும் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும். 

• யுத்தத்துடைய பயங்கரம் மிகவும் பலமாக இருந்தால், கடுமையான மோதல் நிலமை உறுவாகிவிட்டால் வாகனத்திலுல் தொழலாம்; நின்று கொண்டும் தொழலாம், நடந்து கொண்டும் தொழலாம். கிப்லாவை முன்னோக்காமலும் தொழலாம்; சைக்கினை மூலமும் தொழலாம்.  


பிரயாணத் தொழுகை

******************************

• ஒரு பிரயாணத்திற்காக ஊரிலிருந்து வெளியாகியவர் கஸ்ர் செய்வது வாஜிபாகும். ஒரு பரீஃத் தூரமாக இருந்தாலும் கஸ்ர் செய்ய வேண்டும். கஸ்ர் தூரத்தை வரையறுக்க முடியாது. (ஒரு பரீஃத் என்பது நான்கு பர்ஸஹ்க் ஒரு பர்ஸஹ்க் மூன்று மீள் எனவே ஒரு பரீஃத் என்பது பன்னிரெண்டு மீளாகும். அரபியில் ஒரு மீளின் தூரம் என்பது ஒரு மனிதன் வெட்டவெளியில் பார்க்கும் போது ஒரு உருவம் மறைகின்ற வரைக்குமான தூரமாகும். கிட்டத்தட்ட ஒரு மைல்லிற்கு சமனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது) 

• பிரயாணத் தூரத்தை அடைந்து திரும்பி வருகின்ற நேரத்தில் சொந்த ஊருக்கு அண்மித்த ஊரில் வைத்தும் கஸ்ர் செய்யலாம். ஊர் எல்லைக்குள் நுழையும் வரைக்கும். 

• ஒரு ஊரிற்கு பயணப்பட்டு அந்த ஊரில் நிலையாக தங்குவதற்கு உத்தேசமின்றி பயண வேலையாக காலம் கடக்குமானால் இருபது நாள் வரைக்கும் அவருக்கு கஸ்ர் செய்யலாம். ஒரு ஊரிற்கு நான்கு நாட்கள் தங்குவதாக உத்தேசித்துவிட்டு பயணப்பட்டால் அந்த ஊரில் ஐந்தாவது நாளிலிருந்து கஸ்ர் செய்யலாம். 

• முற்படுத்தியோ பிற்படுத்தியோ ஒரு அதான் இரண்டு இகாமத் சொல்லி ஜம்மும் செய்து கொள்ளலாம்.  


சூரிய சந்திர கிரகண தொழுகை

********************************************

• இந்தத் தொழுகை சுன்னாவாகும். (கடமை என்ற கருத்துடான் சரியானதாகும்)

• ரக்காத்துக்களின் எண்ணிக்கை இரண்டாகும். ஒவ்வொரு ரக்காத்திலும் இரண்டு ருக்கூஃக்கள் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்காத்தில் மூன்று, நான்கு, ஐந்து ருக்கூஃக்கள் செய்தார்கள் போன்ற அறிவிப்புக்களும் இருக்கின்றன. (ஆனால் இரண்டு ருக்கூஃக்கள் அல்லாத அனைத்து அறிவிப்புக்களும் பலவீனமானதாகும்)

• ஒவ்வொரு ரக்காத்திலும் முதலாவது ருக்கூஃவிற்குப் பிறகு இரண்டாவது ருக்கூஃவிற்காக நிலைக்கு வந்து ஓதுதல் வேண்டும். ஒவ்வொரு ரக்காத்திலும் ஒரு ருக்கூஃ செய்தார்கள் என்றும் அறிவிப்பும் இருக்கின்றது. (ஆனால் ஒரு ருக்கூஃ சம்பந்தமான அறிவிப்பும் பலவீனமானதாகும்)

• துஆ கேட்டல், தக்பீர் சொல்லுதல், தர்மம் செய்தல், பாவமன்னிப்பு தேடுதல் போன்றவற்றில் தொழக் கிடைக்காதவர் ஈடுபடுதல் சிறந்த்தாகும். 


மழை வேண்டித் தொழுதல்

*************************************

• பஞ்சம் மற்றும் வரட்சியான காலப்பகுதியில் இந்த தொழுகையை தொழுவது சுன்னா.

• இரண்டு ரக்காத்துக்கள் தொழ வேண்டும். தொழுகைக்கு பின் திக்ருகளை அதிகப்படுத்தி, இறைவனை வழிபடுதலை ஆர்வமூட்டி, பாவங்களை தவிர்க்குமாறு எச்சரித்து ஒரு குத்பா நிகழ்த்தப்பட வேண்டும். 

• இமாமும், தொழுகையில் கலந்து கொள்பவர்களும் நிறைய பாவமன்னிப்புத் தேட வேண்டும். 

• பஞ்சம், வரட்சி நீங்குவதற்கு எல்லோருமாக சேர்ந்து துஆ கேட்க வேண்டும். (கூட்டாக அல்லாமல் தனித்தனியாக கையேந்தி மௌனமாக கேட்க வேண்டும்) 

• ஆண்கள் எல்லோரும் தங்களுடைய ஆடைகளின் உள்பக்கத்தை வெளிப்பக்கமாக மாற்றி அணிந்து கொள்ள வேண்டும். (இது இமாமுக்கு மட்டுமே பொருத்தமானது அவர் மேலாடை போட்டிருந்தால் மாத்திரம்)

8 Jun 2021

புத்திசாலி மனிதன்...

 

காலங்கள் ஒரு போதும் பின்னோக்கி நகரப் போவதில்லை...
இன்பகரமான அனுபவங்கள் ரசித்து மகிழ மீண்டு வருவதில்லை...
கஷ்டமான அனுபவங்கள் அனுதினமும் பின் தொடர்வதில்லை..
மரணம் எந்தவொரு மனிதனையும் விட்டு கடந்து போவதில்லை...
அந்த மரணம் எப்போது வரும் என்பதையும் யாராலும் சொல்ல முடிவதில்லை...
என்றால்,
ஒரு புத்திசாலி மனிதன், உலகத்தை நிரந்தர மறுமைக்காக செலவழிக்கமால் இருப்பதை விட்டும் ஒருகாளும் பராமுகமாக இருக்க மாட்டான்..