13 Feb 2015

பெப்ரவரி 14: காதலர் தினமா? காமுகர் தினமா?

வருடா வருடம் பெப்ரவரி 14ஆம் திகதி உலகலாவிய ரீதியில் காதலர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. காதலுக்கு மரியாதை, காதலில்லா உலகமில்லை, காதல் செய் காவியம் படைக்கலாம் போன்ற தொனிப்பொருள்களின் கீழ்  உலகின் பல நாடுகளிலுமுள்ள காதல் மன்னர்கள், காதல் அபிமானிகளால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுவருகின்றது. வருடத்தில் கொண்டாடப்பட்டு அனுஷ்டிக்கப்படும்  அன்னையர் தினம், ஆசிரியர் தினம், சிறுவர் தினம் போன்ற தொடச்சியில் காதலர் தின கொண்டாட்டத்தின் நோக்கமும், முதலாலித்துவ கோட்பாட்டு முதலைகளின் வர்த்தக மயமாக்கலேயென்றால் அதில் மிகையில்லை. மேலும் காதலர் தினம் மனிதனின் இயல்பான கதலுணர்வை பிரதிபலித்து காத்திரமான ஒரு கட்டுக்கோப்பான அளவுகோளுடன்  கொண்டாடப்படக்கூடிய நாளாக அனுஷ்டிக்கப்படுமானால் அதில் ஓரளவு நியாயம் உண்டு. ஆனால் காதலர் தினம்  உறுச்சிதைந்த சிலையாக காமுகர் தினமாக உருமாற்றப்பெற்று சமூகச் சீரழிவை நோக்கிய அடிச்சுவடுகளை பதியவைத்துள்ளது.