14 Sept 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 10

 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)

〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽


ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 

மரணம் : ஹிஜ்ரி 1250 

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 

தொடர் : 10


இஃதிகாப் 

➿➿➿➿➿


• எல்லா நேரத்திலும் இஃதிகாப் இருக்கலாம்.


• ஆகக் குறைந்தது ஒரு இரவு ஒரு பகள் இஃதிகாப் இருக்க வேண்டும்.

 ( நோன்போடுதான் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை இல்லை) 


• பள்ளிகளில்தான் இஃதிகாப் இருக்க வேண்டும். 


• பெண்களும் இஃதிகாப் இருக்கலாம். 


• ரமழானில் மிகவும் வழியுருத்தப்பட்டிருக்கிறது குறிப்பாக கடைசிப் பத்தில்


• இஃதிகாபிற்குச் சென்றால் முயற்சி செய்து அமல்கள் செய்வது சிறந்தது. 


• ரமழானுடைய ஒற்றைப்படையான லைலத்துல் கத்ருடைய தேடல்களில் இஃதிகாப் இருந்து கொள்வது மிகவும் சிறந்தது. 


• அவசியமான தேவைகளை தவிர பள்ளியில் இருந்து வெளியேறக் கூடாது. 


ஹஜ் 

✳✳✳


• முஸ்லிமான பருவ வயதை அடைந்த புத்தி சுவாதீனமுள்ள ஒவ்வொருவரின் மீதும் ஹஜ் செல்வதற்கான பொருளாதார வசதி இருந்தால் அவர் மீது ஹஜ் கடமை. நிபந்தனைகள் பூர்த்தியாகி விட்டால் பிற்போடாது உடனடியாக குறித்த வருடத்திற்கான ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.  இதே போன்றூதான் உம்றாவும். 

இஹ்ராம் (நிய்யத்) 


• தமத்துஃ, கிரான், இப்ராத் இதில் எந்த வகை ஹஜ் என்பதை நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும். முதல் வகை (தமத்துஃ) சிறந்ததாகும். 


• நிய்யத் வைப்பதற்கென்று இஸ்லாம் சில மீகாத்துகளை(எல்லைகளை) சொல்லி இருக்கிறது. குறித்த எல்லைகளில் வைத்தே நிய்யத் வைக்க வேண்டும். 


• யார் குறித்த எல்லைகளுக்கு உட்பட்டவராக இருக்கிறாறோ அவர் அவருடைய இடத்திலிருந்தே நிய்யத் வைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக மக்கா வாசிகள் மக்காவில் வைத்து நிய்யத் வைக்கலாம். 


இஹ்ராமுடைய நிலையில் தடை செய்யப்பட்ட விடயங்கள் 

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳


• மேலாடை, தலைப்பாகை, கோட், கீழாடை, குங்கும நிறம் மற்றும் வாசனையாலும் வர்ஸ் எனப்படும் அரபு கலையாலும் உறுவாக்கப்பட்ட ஆடை, சப்பாத்து போன்றவைகள்  அணியக் கூடாது. ஒருவருக்கு சப்பாத்து தவிர்ந்த வேறு செருப்புக்கள் இல்லாவிட்டால்  அவர் கரண்டைக் காலுக்கு மேலுள்ள பகுதியை வெட்டி விட்டு அணிந்து கொள்ளலாம். (வெட்டுதல் கடமை இல்லை. விரும்பினால் வெட்டிக் கொள்ளலாம். விரும்பினால் அப்படியே அணிந்து கொள்ளலாம்)


• பெண்கள் முகத்திரை, கையுரை, குங்கும நிறம் மற்றும் வாசனையாலும் வர்ஸ் எனப்படும் அரபு கலையாலும் உறுவாக்கப்பட்ட ஆடை அணியக் கூடாது. (பெண்கள் முகத்திரை மற்றும் கையுரை அணியக்கூடாது என்ற அறிவிப்பு இப்னு உமர் (ரழி) அவர்களின் சொந்தக் கூற்றாகும். நபி (ஸல்) வழியாக அறிவிக்கக் கூடிய செய்தி ஷாத்தானதாகும். இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் கூட இந்த கருத்தை வழியுறுத்தியிருக்கிறார்கள்) 


• ஆரம்பமாக வாசனை பூசக் கூடாது. (ஏற்கனவே பூசப்பட்ட ஆடையும், உடலில் வாசம் பூசுவதும் விதிவிலக்கானது இஹ்ராத்துகென்று அணியப்பட்ட ஆடையில் பூசக்கூடாது) 


• முடியை களையக் கூடாது நியாயமான காரணங்கள் இருந்தாலே தவிர. (நியாயமான காரணங்களுக்காக ஒருவர் முடியை களைந்தால் அவர் மூன்று நாட்கள் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது ஒரு ஆட்டை குர்பான் கொடுக்க வேண்டும்) 


• கெட்ட வார்த்தைகள், மோசமாக நடந்து கொள்ளல், பாவம் செய்தல், வீண் தர்க்கங்களில் ஈடுபடல், திருமணம் செய்தல், செய்வித்தல் மற்றும் திருமணப் பேச்சு வார்த்தையில் ஈடுபடுதல் போன்றவைகள் கூடாது. 


• வேட்டையாடுதல் கூடாது. யாரொருவர் அப்படி கொன்று விடுகிறாரோ அதற்கு பரிகாரமக அதே போன்ற பிரிதொன்றை கொடுக்க வேண்டும். 


• பிரர் வேட்டையாடியதை சாப்பிடக் கூடாது. இஹ்ராமுடையவர் வேட்டையாடாதவாராகவும் அல்லது தன்னுடைய விருப்பத்தின் பெயரில் வேட்டையாடப்படாததாகவும் இருந்தால் அதை சாப்பிடுவதில் குற்றமில்லை. 


• இத்ஹிர் என்ற புல் வகையைத் தவிர மற்ற எந்த வகை தாவரங்களையும் சேதப்படுத்தல் கூடாது. 


• ஐந்து வகையான தீங்கிழைக்கக் கூடிய பிராணிகளை கொல்வதில் குற்றமில்லை. (வல் காகம், எலி, தேள், வெறி பிடித்த நாய், பாம்பு)


• மக்காவுடைய புனித பூமியுடைய சட்டங்கள் அனைத்தும் மதீனா புனித பூமிக்கும் பொருந்தும். 


• தாவரங்களை வெட்டக் கூடாது சேதப்படுத்தக் கூடாது என்பதில் அதனுடைய சொந்தக் காரர் அவர் வெட்டி சேதப்படுத்தாத வரை அவருக்கு அதை பயன்படுத்துவது கூடும். 


• தாயிப் எனும் ஊரிலுள்ள வஜ்த் எனும் பிரதேசத்திலும் வேட்டையாடுதல் மற்றும் தாவர வகைகளை வெட்டுதல், சேதப்படுத்தல் கூடாது. (அபூதாவுடைய வரக்கூடிய இந்த செய்தி பலவீனமானது)

12 Sept 2021

தனது செல்வம்...



இந்த உலகத்தில் எந்தவொரு மனிதனும் அவனுடைய செல்வம், தன்னை மரணமே வராமல் நிலையாக வைத்திருக்கும் என்று நினைப்பதில்லை. 

 கேட்டால் அப்படியில்லை என்றுதான் சொல்லுவான். 
 
மனிதனைப் படைத்து அவன் உள்ளங்களின் ஊசலாட்டத்தையும் அறியக் கூடிய ஏக இறைவனாகிய அல்லாஹ், செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று மனிதன் எண்ணுவதாக கூறுவதில் முரண்பாடு போல் தோன்றினாலும் அதில் எந்தவொரு முரண்பாடும் கிஞ்சித்தும் இல்லை. 
 
உண்மையில் மனிதன் தனது சொல்லால் அப்படிச் சொல்லாவிட்டாலும் செல்வம், தன்னை நிலையாக வைக்கும் என்பது போலத்தான் அவனுடைய உலக காரியங்கள் வியாபித்து இருக்கின்றன. 
 
இந்த உலகத்திலே நிரந்தரமாக வாழ வந்தவன் போல் செல்வத்தைக் கொண்டு பெருமை அடிக்கிறான்; தான தர்மங்களை விட்டும் பராமுகமாக இருக்கிறான்; தனது செல்வச் செறுக்கால் பலவீனமானவர்களை இழிவாகக் கருதுகிறான்; ஆடம்பரம், வீண் விரயங்களை கௌரவமாக கருதுகிறான்.
 
எந்த நேரத்திலும் மரணம் தன்னை நெருங்கும் என்ற சிந்தனை அற்று, அதற்கான மறுமை சேகரிப்பை புரக்கணித்து, செல்வச் செழிப்பில் உலகம் அவனை ஏமாற்றிக் கொண்டிருப்பதை அறியாமல் மூழ்கிக் கொண்டிருக்கிறான். 
 
இதே கருத்தைதான் அல்லாஹ் அவனது அருள் மறையில் இன்னோரிடத்தில் மிகத்தெளிவாக விபரித்து இவ்வாறு கூறி இருப்பதை அவதானிக்கலாம்.
 
وَ تَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌‏
 
 
பெரும் பெரும் மாளிகைகளை நிர்மாணிக்கின்றீர்கள் நீங்கள் என்றென்றும் வாழப் போவதைப்போல!
(அல்குர்ஆன் : 26:129)