25 Feb 2015

அன்பான அழைப்பு..

அல்லாஹ் அல்லாதவைகளை அவனின் இடத்தில் வைத்து அவைகளை கடவுள் நிலைக்கு உயர்த்தும், அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவமாக இணைவைப்பு கருதப்படுகிறது. இதற்கு முற்றிலும் எதிராக  அழைப்புப்பணியை மேற்கொள்வது
ஒவ்வொரு முஸ்லிமினதும் தாரகமந்திரமாகவும், அத்தியவசியமானதும், எல்லாவற்றையும் தாண்டி முதன்மையானதாகவும் இருத்தல் வேண்டும்.

மேலும் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் நபி (ஸல்) அவர்கள் வரை உலகிற்கு அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் ஓரிறைக் கொள்கையை, ஷிர்க்கிற்கு எதிரான தமது உச்சகட்ட பிரச்சாரத்தை உயிரையும் துச்சமாக மதித்து மேற்கொண்டார்கள். அன்றைய சமூகத்தினரிடயே காணப்பட்ட, கடவுள் தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் அனைத்து ஷிர்க்கான காரியங்களிற்கும் எதிராக குரலை உயர்த்தினார்கள். ஒட்டுமொத்த நபிமார்களும் ஓங்கி ஒலித்த கொள்கை முழக்கத்தை, அவர்களுக்கு பின் தொடர்சியாக அவர்களின் முன்மாதிரிகளை பின்பற்றும் ஒவ்வொரு தனி நபர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் முதன்மையாகவும், தீவிரமாகவும் பற்றிப்பிடித்து உயரிய சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை செய்ய வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் இன்றியமையாததாகும்.