18 Apr 2014

நல்லிணக்கம் எனும் போர்வையில் நசுக்கப்படும் சமுதாயம்.

இலங்கையின் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் ”நல்லிணக்கம்” என்ற சொற்பதம் பரவலாக எம் சமூகத்திற்கு மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. அதேபோல் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, தாராளத்தன்மை போன்ற சொற்பதங்களும் ”நல்லிணக்கத்திற்கு” இணக்கமாக கையாளப்படுகின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் முற்றி முறுக்கேரி பற்றி எறிகின்ற இச்சூழ்நிலையில் இவ்வாறான சொற்பிரயோகங்களினால் அவற்றை அனைப்பதற்கு முயற்சிக்கும் நகர்வுகளாகவே தெரிகிறது. என்றாலும் இனவாத இரும்புக் கரம் இம்மியளவும் அடங்குவதாகத் தெரியவில்லை. இவ்வாறான சொற்பிரயோகங்கள் அவர்களுக்கு அடிபணிகின்ற அல்லது அச்சத்தின் வெளிப்பாடாகவே நோக்கப்படுகிறது, என்றால் அவர்களின் உத்வோகமே இதற்கு சான்று.