17 Sept 2015

விமர்சனக் கண்ணோட்டம்

ஒருவரின் பேச்சு, எழுத்து, நடத்தை, நடவடிக்கை, போங்கு போன்றவைகள் சமூக கட்டமைப்பை தகர்க்கும் அல்லது அச்சுறுத்தும் என்ற நிலையை தோற்றுவிக்குமானால் தயவுதாட்சணமின்றி, காய்தல் உவர்த்தல் இன்றி அவைகளை சமூக மட்டத்தில் மேற்கோள் காட்டி விழிப்புணர்வூட்டப்படுவது இன்றியமையாதது. 

நடு நிலை வாதிகள் இதில் பூசி மெழுகி தளர்வுத் தன்மையை கடைபிடிப்பதானது பல வழிகளிள் பிழையான அணுகுமுறையாகும். 

11 Sept 2015

ஹெம்மாத்தகமை சம்பவம் ஓர் அலசல்

(06.09.2015) ஹெம்மாத்தகமையில் SLTJ யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்று மத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில், இடை நடுவில் பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் தலையிட்டு நிகழ்ச்சியை நடத்த விடாமல் குழப்பத்தை விளைவித்தனர். இதைனையடுத்து SLTJ தலைமையகத்தினால் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் பொதுபலசேனாவுக்கு எதிராகவும், ஹெம்மாத்தகம பொலிஸின் பக்கச்சார்பான செயற்பாடு குறித்தும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவத்தின் பிற்பாடு பலரும் பலவிதமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டிருந்தனர். அனைத்துக் கருத்துக்களையும் பகுப்பாய்ந்து அலசுகின்ற போது இரண்டு நிலைகளையே அவதானிக்க முடிகிறது.

9 Jun 2015

இஸ்லாத்தின் இறைகோட்பாடும் பகுத்தறிவுப் புரிதலும்

கடந்த 15.05.2015 அன்று “இலங்கை சூழலில் காபிர்கள் என்றழைக்கலாமா?"   என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் விடிவெள்ளியில் பிரசுரமாகியிருந்தது. கட்டுரையாளர் இலங்கையின் கலப்பு இனச் சூழலில் முஸ்லிம் அல்லாதோரைக் ‘காபிர்கள்’ என்று அழைப்பது ஏற்புடையதல்ல என்று, சில காரணங்களை தொகுத்து ஆக்கத்தை முழுமைப்படுத்தியிருந்தார். கட்டுரையாளரின் குறித்த காஃபிர் தொடர்பிலான கருத்தியல் பல கோணங்களில் பிழையானவை என்பதை தெளிவுபடுத்துவதே இவ்வாக்கத்தின் நோக்கம்.

23 May 2015

தப்லீக் தலைக்கனம்

தலைப்பைப் பார்த்ததுமே அசந்து போய் ஏதோ வில்லங்கமா இருக்குமோ? என்று சந்தேகிக்க வேண்டாம். தப்லீக் சகோதரர்கள் சற்று உணர்ச்சிவசப்பட்டு  தலைகால் புரியாமல் மனதிற்குள் திட்டித்தீர்த்துக்கொள்ள வேண்டாம்.  குறித்த தலைப்பில் இவ்வாக்கம் வரையப்படுவதின் பிரதான காரணம், எனது வாழ்வில் நிகழ்ந்த தப்லீக் கார்கூன் ஒருவரினூடான கசப்பான அலவலாவலின் உள்ளார்ந்த வெளிப்பாட்டின் பிண்னணி என்பதை, இவ்வாக்கத்தை ஆறம்பம் முதல் இறுதி வரை இதயசுத்தியுடன் வாசிப்பதினூடாக புரிந்து கொள்ள முடியும். எனவே தலைப்பின் பொருத்தப்பாடு தப்லீகின் அஸ்திவார காட்டுமானப் பணியின் வழுவற்ற, ஸ்திரமற்ற தன்மையே பளிச்சிடுகின்றது.

7 May 2015

வெசாக் அன்னதான நிகழ்வுகளும் முஸ்லிம்களும்

உலகலாவிய பௌத்தர்கள் மே மாதம் பௌர்னமி தினத்தில் வெசாக் எனும் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பௌத்தர்களை பெருபான்மையாகக் கொண்ட இலங்கையிலும் வெசாக் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. புத்தரின் வரலாற்றைச் சித்தரிக்கின்ற வகையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட  தோரணங்கள், வெசாக் கூடுகள், பிரித் வைபகங்கள், அன்னாதான நிகழ்வுகள் என பல்வேறு அம்சங்களின் தொகுப்புக்களால் வெசாக் பண்டிகை விழாக் கோளமிடுகிறது. குறிப்பாக அன்னதான நிகழ்வுகள் நாட்டின் நாலாபுரங்களிலும் மக்கள் அலை மோதுகின்ற அளவில்  நடைபெறுகிறது.
 
இவ்வன்னதான நிகழ்வுகளில் முஸ்லிம் பெயர் தாங்கிய அப்துல்லாக்களும், பாத்திமாக்களும் பங்குபற்றும் காட்சியே மிகப் பரிதாபகரமானது. அன்னாதானமாக பரிமாரப்படும் உணவுகளுக்காக ஆண்கள் பெண்கள் குழந்தைகள் சகஜம் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலக் காட்சியை  ஊர்கள் பாரபட்ச்சமின்றி வருடம் தோறும் கண்களால் காணக்கிடைக்கிறது.

26 Apr 2015

தர்காக்களில் தவிடுபொடியாக்கப்படும் இஸ்லாத்தின் அடிப்படைகள்

இஸ்லாத்தின் இறுதித் தூதுத்துவப்பணி நிறைவுற்று 14 நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் வல்லோன் அல்லாஹ்வால் அதன் அசல்  இன்று வரைக்கும் எவ்வித கலங்கமும், மாறுதலும் இன்றி  பாதுகாக்கப்பட்டுள்ளது. புனித உரைகளான அல்-குர்ஆன்  மற்றும் ஆதரபூர்வமான ஹதீஸ்கள் மூலம் இவைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இவ்விரண்டும்தான் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட நேரான வழி. நேரான வழிக்குப் புரம்பாக எடுத்துவைக்கப்படும் ஒவ்வொரு எட்டுக்களும் புரக்கணித்து ஒதுக்கிவிடப்படவேண்டியவை. எனவேதான் நமது ஒவ்வொரு நடைமுறை சார் விடயங்களும் புனித உரைகளில் உரசிப்பார்த்தே நகர்தல், நகர்த்தப்படல் வேண்டும்.

7 Apr 2015

முகநூலில் முலாம் இடப்பட்டிருக்கும் தனிநபர் தாக்குதல்கள்..




முகநூலில் பரவலாக தனி நபர்களை நோக்கி மட்டுமே தமது விமர்சனங்களை குறிவைக்கும் கீழ்தரமான தஃவா முறையை இயக்க வேறுபாடின்றி அனைவருமே கையிலேந்திருக்கும் ஒரு துரதிஷ்ட நிலையையே காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு மாற்றுக் கருத்துடையவர்களை அவர்களின் சில சொந்த வாழ்க்கையை இழுத்து அவர்களின் தனிப்பட்ட குறைகளை அம்பலப்படுத்தும், இஸ்லாம் வெறுக்கின்ற செயற்பாட்டை செய்து வருகின்றனர். போதாக்குறையாக, இதை நியாயப்படுத்த தம்பக்கம் நியாயத்தையும் சுமந்து கொள்கின்றனர், அதாவது "நீங்கள் மட்டும் எல்லை மீறி நமது சொந்த விடயங்களை சந்திக்கு இழுப்பீர்கள்; நாங்கள் பதிலீடாக மட்டும் சொன்னால் அளவு கடந்த விமர்சனம் என்பீர்கள்" என்றொரு நீதி இல்லாத நியாத்தை சொல்கிறார்கள். ஆனால் இஸ்லாம் ஆகுமாக்காத ஒன்றை இவ்வாறு இன்னொருவர் செய்கிறார்கள் என்பதற்காக தாமும் அதை ஆகுமாக்கிக் கொள்வது அறியாமையின் உச்சகட்டமாகும். 

29 Mar 2015

சஹாபாப் பெண்களின் சமூகப் பங்களிப்புகள்..

சஹாபாப் பெண்களின் சமூகப் பங்களிப்பின் கருத்தாளங்களை கட்டுரைப்படுத்த முன் முதலில் சமூகம் என்றால் என்ன? சமூக கட்டமைப்பில் உள்வாங்கப் படுபவர்கள் யார்? என்ற புரிதலுக்கான கேள்விகளுக்கு விடை தொடுக்க முனைகிறேன். தமிழ் அகராதியின் பிரகாரம் ஒரு குறிப்பிட்ட தொழில், துறை, இனம் முதலியனவற்றைச் சேர்ந்தவர்களின் தொகுதியை சமூகம் என வரையரைப்படுத்தலாம். மேற்குறிப்பிட்டவற்றைச் சார்ந்தவர்கள் அச்சமூக கட்டமைப்பில் உள்ளடங்குபவர்கள். ஏன் இதை தலைப்பிற்கு அப்பால் நின்று மிகவும் அழுத்தி விளங்கப்படுத்துகிறேன்? என்றால், சஹாபாப் பெண்களை பொருத்தமட்டில் எச்சமூகத்தை பிரதிபலித்து தமது பங்களிப்பை மேற்கொண்டார்கள்? என்ற வினாவிற்கு விடை காணல் வேண்டும். அதாவது அவர்களை சார்ந்து இருந்த கொள்கையான இஸ்லாமியச் சமூகம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக வேண்டிதான். மனித நேயம் கொண்டவர்கள் ஒட்டுமொத்த மனித சமூகத்தை பிரதிபலித்துத்தானே தமது பங்களிப்பை செய்திருக்க வேண்டும்.? ஏன் இஸ்லாமிய சமூகத்தை மட்டும் குறிவைத்து தமது பங்களிப்பை சுருக்கிக் கொண்டார்கள்? போன்ற கேள்விகள் எழுவதிலும் தவிர்க்க முடியாது. 

பணம் படுத்தும் பாடும்… இஸ்லாத்தின் இலகு வழியும்


"பணத்தை கண்டால் பிணமும் வாய் திறக்கும்" என்பது முதுமொழி. அதை சற்றே குறைவின்றி பிரதிபலிக்கும் விதமாக, பணம் இன்றைய மனிதனை அடிமைப் படுத்திருக்கின்றது. இன்று பணம் ஒருமனிதனிடத்தில் இல்லை என்றால் அவன் உலகத்தில் வாழ்வதில் அர்த்தமேயில்லை என்றளவிற்கு, பணம் உயிருக்கு நிகராக நோக்கப்படும் அவலம் மனிதனை பீடித்திருக்கிறது. ஏனென்றால் பணம் இன்று மனிதனுடைய அனைத்து அம்சங்களிலும் ஊடுறுவி செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதை மறுக்க முடியாது.

எனவேதான் மனிதன் பணத்துக்காக நாயாய், பேயாய் அலைகின்றான். அதை அடைந்து கொள்வதற்கு இரவு பகல், மழை வெயில் என்று பாராமல் தனது வாழ்க்கையே அரப்பணிக்கின்றான். மானம், மரியாதை, குடும்பம், குழந்தை, சொந்தம், பந்தம், வீடு, நாடு என்று அனைத்தையும் பணத்துக்காக  வேண்டி துச்சமாக துறக்கின்றான். பொய், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், கலப்படம் என்று பஞ்ஞமா பாதகங்களையும் பணத்திற்காக பயமின்றி செய்யத் துணிகின்றான். இத்தனைக்கும் தனக்கு பணம் கிடைத்தால் போதுமென்ற தப்பெண்ணம்தான் அடிப்படைக் காரணம். மட்டுமல்லாமல் கர்வம், பெருமை, மற்றவர்களை மட்டம் தட்டல், தற்பெருமை பாரட்டல், கஞ்ஞத்தனம் போன்ற கூடாத துர் குணங்களாளும் பணம் மனிதனை ஆட்டிப்படைத்து விழுங்கிவிட்டிருக்கின்றது. பணம் அளவு கடந்து இருப்பவர்கள், பணம் அளவோடு இருப்பவர்கள், பணத்திற்காக திண்டாடுபவர்கள் என்று அனைத்துத் தரப்பினர்களும் பெரும்பாலும் பணத்தின் காரணமாகத்தான் தனது மானிடப் பண்புகளையெல்லாம் மறந்து மிருகங்களை விட கேவலமானவர்களாக மாறிவிடுகின்றனர்.  

முரண்பாடும் உடன்பாடும்


[முரண்பாட்டின் தோற்றம்]
இந்த நூற்றாண்டு மட்டுமல்ல வரலாறு நெடுகிலும் முரண்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் நோக்கப்படுகிறது. மனிதனுக்கே உரிய சில பலவீனங்கள், துர் பண்புகள் முரண்பாட்டை தோற்றுவிக்கின்றன. பலவீனங்கள், துர் பண்புகள் நபருக்கு நபர் வேறுபடும் பொழுது சுயமாகவே முரண்பாடு தோற்றம்பெறுகிறது. மனித பலவீனம், துர் பண்பு என்ற அஸ்திவாரத்தில்தான் முரண்பாடு என்ற கட்டிடம் கட்டியமைக்கப்படுகிறது.

25 Feb 2015

அன்பான அழைப்பு..

அல்லாஹ் அல்லாதவைகளை அவனின் இடத்தில் வைத்து அவைகளை கடவுள் நிலைக்கு உயர்த்தும், அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவமாக இணைவைப்பு கருதப்படுகிறது. இதற்கு முற்றிலும் எதிராக  அழைப்புப்பணியை மேற்கொள்வது
ஒவ்வொரு முஸ்லிமினதும் தாரகமந்திரமாகவும், அத்தியவசியமானதும், எல்லாவற்றையும் தாண்டி முதன்மையானதாகவும் இருத்தல் வேண்டும்.

மேலும் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் நபி (ஸல்) அவர்கள் வரை உலகிற்கு அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் ஓரிறைக் கொள்கையை, ஷிர்க்கிற்கு எதிரான தமது உச்சகட்ட பிரச்சாரத்தை உயிரையும் துச்சமாக மதித்து மேற்கொண்டார்கள். அன்றைய சமூகத்தினரிடயே காணப்பட்ட, கடவுள் தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் அனைத்து ஷிர்க்கான காரியங்களிற்கும் எதிராக குரலை உயர்த்தினார்கள். ஒட்டுமொத்த நபிமார்களும் ஓங்கி ஒலித்த கொள்கை முழக்கத்தை, அவர்களுக்கு பின் தொடர்சியாக அவர்களின் முன்மாதிரிகளை பின்பற்றும் ஒவ்வொரு தனி நபர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் முதன்மையாகவும், தீவிரமாகவும் பற்றிப்பிடித்து உயரிய சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை செய்ய வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் இன்றியமையாததாகும்.

13 Feb 2015

பெப்ரவரி 14: காதலர் தினமா? காமுகர் தினமா?

வருடா வருடம் பெப்ரவரி 14ஆம் திகதி உலகலாவிய ரீதியில் காதலர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. காதலுக்கு மரியாதை, காதலில்லா உலகமில்லை, காதல் செய் காவியம் படைக்கலாம் போன்ற தொனிப்பொருள்களின் கீழ்  உலகின் பல நாடுகளிலுமுள்ள காதல் மன்னர்கள், காதல் அபிமானிகளால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுவருகின்றது. வருடத்தில் கொண்டாடப்பட்டு அனுஷ்டிக்கப்படும்  அன்னையர் தினம், ஆசிரியர் தினம், சிறுவர் தினம் போன்ற தொடச்சியில் காதலர் தின கொண்டாட்டத்தின் நோக்கமும், முதலாலித்துவ கோட்பாட்டு முதலைகளின் வர்த்தக மயமாக்கலேயென்றால் அதில் மிகையில்லை. மேலும் காதலர் தினம் மனிதனின் இயல்பான கதலுணர்வை பிரதிபலித்து காத்திரமான ஒரு கட்டுக்கோப்பான அளவுகோளுடன்  கொண்டாடப்படக்கூடிய நாளாக அனுஷ்டிக்கப்படுமானால் அதில் ஓரளவு நியாயம் உண்டு. ஆனால் காதலர் தினம்  உறுச்சிதைந்த சிலையாக காமுகர் தினமாக உருமாற்றப்பெற்று சமூகச் சீரழிவை நோக்கிய அடிச்சுவடுகளை பதியவைத்துள்ளது.