5 Jul 2021

மத்தியஸ்தம்



கணவன் மனைவி பிரச்சினைகள் கணவன் மனைவிக்கு மத்தியிலே சுருங்கிக் கொள்வதுதான் ஆரோக்கியம். 

அதில் மூன்றாம் நபர் தலையிடும் போது அல்லது வெளி உலகிற்கு ஏதோ ஒரு வகையில் தெரிய வரும் போது இயல்பாக தீருகின்ற பிரச்சினை கௌரவ சிக்கலாக உறுமாறி தீராத பகையாக மாறக் கூடும்.

கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சினைகள் ஊற்றெடுப்பது என்பது இயல்பானது. பிரச்சினை இருவரில் ஒருவரின் விட்டுக்கொடுப்பு அல்லது மௌனமான இடைவெளிளால் இயல்பாக சமாதானமாவதும் சர்வசாதரணமானது. 
 
ஆனால் அதில் வெளி நபர்கள் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்தாக மாறுகின்ற போது, பிரச்சினைக்கான தீர்வில் இருவரின் கௌரவம் தடையாக வந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. 
 
பெண்ணைப் பெற்ற, ஆணைப் பெற்ற பெற்றோர்களும் ஏதோ பிரச்சினை என்று தெரியவந்ததும் உடனே கட்டப்பஞ்சாயத்து செய்வதை நிறுத்த வேண்டும். அவர்கள் வழியில் அவர்களை விட்டுவிட்டு நல்லெண்ணம் வைப்பதே அவர்களின் பொறுப்பாகும். இல்லையென்றால் குளிக்கப் போய் சேறு பூசிக் கொண்ட நிலைதான் ஏற்படும்.