2 Jun 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் : 03

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)
ஆசிரியர் : இமாம் ஷவ்கானி
மரணம் : ஹிஜ்ரி 1250
விரிவுரை : அஷ்ஷேய்க் முஜா
ஹித் இப்னு ரஸீன்
தொகுப்பு : எம்.கெ. யாஸிர்
தொடர் : 03

மாதவிடாய்
*****************
• மாதவிடாயுடைய காலப்பகுதியை பொருத்தவரையில் அதனுடைய குறைந்த நாள் அளவென்ன கூடிய நாள் அளவென்ன என்பதில் சொல்லத்தக்க அளவில் எந்தவித ஆதாரமும் இல்லை. அதே போன்றுதான் சுத்தம் என்பதும் வரையரை கிடையாது.
• நிலையான வழமைக் கொண்ட பெண் அதற்கு ஏற்றாற் போல் செயற்பட வேண்டும்.
• வழமையை தீர்மானிக்க முடியாத பெண்கள் அவங்களுக்குறிய துணை அடையாளங்களை வைத்து செயற்பட வேண்டும். பெண்களுக்குத் தெரியும் மாதவிடாய் இரத்தம் ஏனைய இரத்தத்தை விட வித்தியாசப்படும்.
• ஒரு பெண் மாதவிடாய் பெண்ணாக எப்பொழுது மாறுவாள் என்றால், மாதவிடாய் இரத்தம் அவர்கள் அறிந்த அமைப்பில் எப்போது வருகின்றதோ அப்போதிலிருந்து மதாவிடாய் பெண்ணுக்குறிய மார்க்க சட்டத்திற்குள் நுழைகின்றாள்.
• மேலதிக உதிரப்போக்குள்ள பெண்ணை பொறுத்த வரை அவளுக்கு தெரியும் இந்த இரத்தம் மாதவிடாய் இரத்தத்தை விட வித்தியாசமானது என்று. எனவே மேலதிக உதிரப்போக்குள்ள பெண்ணுக்குறிய சட்டத்திகுள் அவள் நுழைகின்றாள்.
• மேலதிக உதிரப்போக்குள்ள பெண்ணின் சட்டம்; இரத்ததையும் அதன் அடையாளத்தையும் கழுவிக் கொள்ளல் வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூ செய்து கொள்ள வேண்டும்.
மாதவிடாய் பெண்கள் செய்யக் கூடாதவை
**********************************************************
• தொழக் கூடாது
• நோன்பு வைக்கக் கூடாது
• சுத்தத்துக்குப் பின்னால் குளிக்கும் வரைக்கும் குடும்ப உறவில் ஈடுபடக் கூடாது (கருத்து முரண்பாடு உள்ள விடயமாகும் மாதவிடாய் இரத்தம் நின்று விட்டாலே குடும்ப உறவில் ஈடுபட முடியும் என்பதே சரியானது)
• மாதாவிடாய் மூலமாக விடுபட்ட நோன்புகளை கலா செய்ய வேண்டும். தொழுகையை கலா செய்ய வேண்டியதில்லை.
பிரசவத் தீட்டு
********************
• இதனுடைய அதிக நாள் 40 நாட்களாகும்
• இதனுடைய ஆகக் குறைந்த அளவு என்பதற்கான எந்த வித ஆதரமும் இல்லை.
• மாதாவிடையுடைய சட்டம்தான் இதற்கும் உரியது
தொழுகை
---------------
தொழுகையுடைய நேரங்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
லுஹருடைய ஆரம்பம்
********************************
• சூரியன் உச்சியிலிருந்து சாய ஆரம்பிக்கும் நேரம்
• சூரியன் உச்சியிலிருந்து சாய ஆரம்பித்தல் என்பது நாம் சூரிய ஒளி படுகின்ற இடத்தில் இருக்கும் போது எமது நிழல் எம்மைச் சுற்றி சுருங்கி இருக்காமல் ஏதவது ஒரு பக்கத்தில் சாய்ந்து இருத்தலாகும்.
லுஹருடைய கடைசி / அஸருடைய ஆரம்பம்
*************************************************************
• ஒவ்வொரு பொருளுடைய நிழலும் குறித்த பொருடைய அளவிற்கு சமனாக வரும் நேரமாகும். ஆனால் சூரியனின் ஓட்டத்தின் காரணமாக ஏற்படும் சாய்வை கணக்கெடுக்கக் கூடாது.
அஸருடைய கடைசி நேரம்
************************************
• சூரியன் எதுவரைக்கும் இலங்கிக் கொண்டிருக்கக் கூடிய வெண்மையோடு இருக்கிறதோ அது வரைக்கும் அஸருடைய நேரம். அதனுடைய வெண்மைத் தன்மை சிவப்பாகவோ அல்லது இளம் சிவப்பாகவோ மாற ஆரம்பித்தால் அது அஸருடைய கடைசி நேரமாகும்.
மஹ்ரிபுடைய ஆரம்ப நேரம்
**************************************
• சூரியன் மறையும் நேரம்
மஹ்ரிபுடைய கடைசி நேரம் / இஷாவுடைய ஆரம்ப நேரம்
****************************************************************
• சிவந்த அடி வானம் அற்றுப் போய், வானம் முழுமையாக இருளாக இருக்கும் நேரமாகும்.
இஷாவுடைய கடைசி நேரம்
*************************************
• இரவுடைய நடுநிசியாகும். மஹ்ரிபுடைய நேரத்திலிருந்து பஜ்ர் ஆரம்ப நேரம் வரைக்குமான அரைப் பங்கு வரை இஷாவுடைய கடைசி நேரமாகும்
பஜ்ருடைய ஆரம்ப நேரம்
************************************
• நம்முடைய பகுதிக்கு முதன் முதலாக சூரியனின் வெளிச்சம் படுகின்ற நேரமாகும்.
பஜ்ருடைய கடைசி நேரம்
***********************************
• சூரியனுடை ஒரு கீற்று படுகின்ற நேரம். அதாவது சூரியன் உதிக்கும் நேரமாகும்.
 யார் தனது தொழுகையை விட்டும் தூங்கினாறோ அல்லது மறந்து விட்டாரோ அவருடைய வக்து நேரம் என்பது அவருக்கு ஞாபகம் வருகின்ற நேரமாகும்.
 யாருக்கு நியாயமான காரணத்தினால் தொழுகைக்கு சற்று நேரம் கடந்து விட்டால் அவருக்கு அந்தத் தொழுகையில் ஒரு ரக்ஆத் கிடைத்தாலும் முழு தொழுகையும் கிடைத்ததற்கு சமனாகும்.
 உரிய நேரத்திற்கு தொழுவது வாஜிபாகும். நேரத்திற்கு உட்பட்ட நேரத்தில் தொழுவதும் வாஜிபாகும்.
 நியாயமான காரணங்களுக்காக ஜம்ஊ (சேர்த்துத் தொழுதல்) செய்தல் அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஊரில் இருந்தாலும் சரி வெளியூரில் இருந்தாலும் சரி)
 தயம்மம் செய்தவரும், தொழுகையை முழுமையாக தொழ முடியாதவரும் அல்லது சுத்தத்தை முழுமையாக செய்ய முடியாதவரும் வக்து முடிகின்ற கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களும் உரிய நேரத்தில் தொழுவது வாஜிபாகும்.
தொழுவதற்கு வெறுக்கப்பட்ட நேரங்கள்
*******************************************************
 மக்காவைத் தவிர அனைத்து பிரதேசங்களுக்கும் வெறுக்கத்தக்க நேரங்களுக்குறிய சட்டம் பொருந்தும். (மக்காவைத் தவிர என்பது ஹதீஸ்களின் புரிதளுக்கு அப்பாற் பட்டதாகும். எல்லாப் பிரதேசங்களுக்கும் பொதுவான சட்டம் என்பதே சரியான கருத்தாகும்)
1. சூரியன் உதிக்கின்ற நேரம்
2. சூரியன் உச்சியில் இருந்து சாயும் வரைக்குமுள்ள நேரம்
3. அஸருக்குப் பிறகு சூரியன் சிவப்பாகவோ அல்லது இளம் சிகப்பாகவோ மாறி சூரியன் மறையும் வரைக்குமுள்ள நேரம்.

 

1 Jun 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் : 02

 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)
ஆசிரியர் : இமாம் ஷவ்கானி
மரணம் : ஹிஜ்ரி 1250
விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்
தொகுப்பு : எம்.கெ. யாஸிர்
தொடர் : 02

 

வுழூ

1. வுழூ பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமை தொழுவதாக இருந்தால்..
2. வுழூ செய்வதற்கு முன்னால் பிஸ்மில்லாஹ் சொல்வது சுன்னா
 

வுழூவின் ஒழுங்குகள்


1. வாய் கொப்பளித்தல்
2. நாசிக்கு நீர் செலுத்துதல் அதை சிந்துதல்
3. முழு முகத்தையும் கழுவுதல்
4. இரண்டு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும்
5. தலையை மஸ்கு செய்ய வேண்டும் அதே தண்ணீரால் இரண்டு காதுகளையும் கழுவ வேண்டும்.
தலைப்பாகையோ, தொப்பியோ, முக்காடோ போட்டிருந்தால் தலையில் சிறிதளவு மஸ்கு செய்து அதன் மேல் முழுமையாக செய்ய வேண்டும்.
6. கரண்டைக் கால் அளவு இரண்டு கால்களையும் கழுவ வேண்டும். சப்பாத்து அணிந்து இருந்தால் சப்பாத்தின் மேல் மஸ்கு செய்யலாம்.
7. வுழூவுக்குறிய நிய்யத் இருந்தாலே தவிர அது மார்க்கம் சொல்லக்கூடிய வுழூவாக மாறும்.
8. தலை அல்லாத மற்ற பகுதிகளை மூன்று முறை செய்வது சிறந்தது. தலையை ஒரு முறைதான் மஸ்கு செய்ய வேண்டும்.
9. வுழூ எடுக்கும் போது பல் துலக்குவதை முற்படுத்துதல் சிறந்தது.
10. வுழூ எடுப்பதற்கு முன்னர் மணிக்கட்டு வரை இரண்டு கைகளையும் மூன்று முறை கழுவிக் கொள்ளுதல் சுன்னா
 

வுழூவை முறிக்கும் காரியங்கள்


1. மனிதனுடைய மலசலப் பாதையுனூடாக எந்தவொன்று வெளியாகினாலும்
2. எதன் காரணமாக குளிப்பு கடமையாகுமோ அதன் காரணமாகவும் வுழூ முறியும்
3. ஒட்டக இறைச்சி சாப்பிடுதல்
4. ஆழ்ந்து தூங்குதல்
5. வாந்தி எடுத்தல் இது போன்றவைகள் (இதற்கு ஆதாரம் இல்லை)
6. இச்சையோடு அந்தரங்க உறுப்புக்களை தொடுதல் 
 

குளிப்பு

குளிப்பு கடமையாகும் காரியங்கள்


1. மனிதனுக்கு ஆசையின் காரணமாக மனி வெளிப்படுதல். இது சிந்திப்பதன் மூலம் இந்திரியம் வெளிப்படுவதையும் குறிக்கும்.
2. ஆண் பெண் உறுப்பு சந்திதுக் கொள்ளுதல்
3. மாதாவிடாய் இரத்தம் நின்றவுடன்
4. பிரசவத்தின் காரணமாக வெளிப்படும் இரத்தம் நின்றவுடன்
5. தூக்கத்தில் ஸ்கலிதம் ஆகிவிட்டதாக தனது ஆடையில் ஈரத்தை காணுதல்
6. மரணமாதல் (அவர் சார்பாக பிறருக்கு கடமை)
7. இஸ்லாத்திற்கு நுழைதல் (கருத்து முரண்பாடு உண்டு) 
 

கடமையான குளிப்பின் குறைந்த பட்ச நிபந்தனைகள்

 
1. முழு உடலிலும் தண்ணீர் படும் வகையில் தண்ணீரை ஊற்றல்
2. முழு உடலும் நனைகின்ற வகையில் தண்ணீரில் மூழ்குதல்
3. கடமையான குளிப்பிற்குறிய நிய்யத் இருந்தால் மாத்திரம்தான் அது மார்க்கம் சொல்லக்கூடிய குளிப்பாக மாறும்.
4. வுழூவுடைய உறுப்புக்களை முற்படுத்துவதும் வலதால் செய்வதும் விரும்பத்தக்கது.
5. பெண்கள் கட்டுமுடியை அவிழ்க்க வேண்டிய அவசியமில்லை
• ஜும்ஆ குளிப்பு சுன்னத்தாகும், இரு பெருநாள் குளிப்பும் சுன்னத்தாகும் (ஜும்ஆ குளிப்பு ஆதார அடிப்படையில் இரு பாலாருக்கும் வாஜிப், இரு பெருநாள் குளிப்புகள் சுன்னா என்பதை பொருத்த வரை அனைத்து ஆதாரங்களும் பலவீனமானவைகள்)
• ஜனாசாவை குளிப்பாட்டுகின்றவர் குளிப்பது சிறந்தது
• இஹ்ராமிற்காக குளிப்பது சிறந்தது
• மக்காவில் நுழைவதற்காக குளிப்பது சிறந்தது 
 

தயம்மம்

 
 தயம்மம் செய்தால் வுழூ, குளிப்பு மூலமாக எதுவெல்லாம் கூடுமோ அதுவெல்லாம் கூடும்.
தயம்மத்தின் நிபந்தனைகள்
***************************************
• தண்ணீர் கிடைக்காமல் இருத்தல்
• நியாயமான காரணங்களுக்காக தண்ணீரை உபயோகிக்க முடியாமல் இருத்தல்
 

தயம்மத்தின் ஒழுங்குகள் 

 
• தயம்மத்தின் உறுப்புக்கள் முகம் மற்றும் மணிக்கட்டு வரை இரண்டு கைகளுமாகும்.
• ஒரு தடவைதான் மஸ்கு செய்ய வேண்டும்.
• நிய்யத்துடன் பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பிக்க வேண்டும். (பிஸ்மில்லாஹ் சொல்வது வாஜிப் அல்ல)
• கைகளால் ஒரு முறைதான் மண்ணை தடவ வேண்டும்.
• கை, முகம் என்பதில் எதை முதலில் செய்தாலும் மார்க்க ரீதியாக பிழை கிடையாது.
வுழூவை முறிக்கும் காரியங்கள் அனைத்தும் தயம்மத்தையும் முறிக்கும்.

30 May 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் : 01



 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)

ஆசிரியர் : இமாம் ஷவ்கானி

மரணம் : ஹிஜ்ரி 1250

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர்

தொடர் : 01

 

சுத்தம்

தண்ணீரின் வகைகள்

1. சுத்தமானது
2. சுத்தப்படுத்தக் கூடியது
தண்ணீர் எப்போது அசுத்தமாக மாறும்?
• இஸ்லாம் அசுத்தம் என்று சொல்லக்கூடிய ஒரு பொருள் கலந்து தண்ணீருடைய நிறத்தையோ, சுவையையோ, வாசத்தையோ மாற்றினால்..
• தண்ணீர் சுத்தப்படுத்தக் கூடியது என்பதிலிருந்து சுத்தமானதிற்கு மாறக் கூடியது.
உ+ம் : சுத்தமான மற்றும் சுத்தப்படுத்தக் கூடிய தண்ணீரில் சவர்காரமோ அது சார்ந்த ஏதாவது ஒரு பொருளோ கலந்து விட்டால் சுத்தப்படுத்தக் கூடியது என்பதிலிருந்து சுத்தமானதிற்கு மாத்திரம் மாறிவிடும். எனவே இந்த தண்ணீரில் வுழூ செய்ய முடியாது..
• இந்த சட்டத்திற்கு தண்ணீரின் அளவிலோ, ஓடக் கூடிய மற்றும் தேங்கி நிற்றல் அடிப்படையிலோ அல்லது பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத நிலையிலோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
 

நஜீஸ்

1. மனிதனுடைய மலம் சலம்
பால் குடிக்கக் கூடிய மற்றும் சாப்பிட முடியாத கைக் குழந்தைகளின் சிறுநீர் அசுத்தம் கிடையாது.
2. நாயுடைய எச்சில்
3. கழுதை, குதிரை, கோவேரிக் கழுதையின் விட்டை
4. மாதாவிடாய் இரத்தம்
5. பன்றி
இதுவல்லாத எல்லாவற்றிலும் கறுத்து முரண்பாடுகள் இருக்கின்றன.
• எல்லாவிடயங்கலிலும் அசல் சுத்தமானது. அசுத்தம் என்பதற்குதான் ஆதரபூர்வமான ஆதாரம் இருக்க வேண்டும். (ஹலால், ஹராம் விடயத்திலும் இதேதான்)
 

அசுத்தம் பட்டு விட்டால் எப்படி சுத்தப்படுத்துவது?

1 தண்ணீரால் கழுவுவதன் மூலம்
• பட்ட அசுத்தம் முழுமையாக நீங்கி விட வேண்டும்
• அசுத்தத்தின் காரணமாக இருந்த நிறம், சுவை, வாசம் நீங்க வேண்டும்.
2 செறுப்பில் பட்ட அசுத்தத்தை மண்ணில் தேய்ப்பதன் மூலம் சுத்தப்படுத்த முடியும்.
3 ஒன்றிலிந்து இன்னொன்றுக்கு மாறுதல்
• அசுத்தம் பட்ட பொருள் ஒன்று அதுவாகவே அதனுடைய நிறம், சுவை, வாசம் உட்பட அசுத்ததின் அடையாளம் முழுமையாக நீங்குதல்.
உ+ம் செத்த ஆடு சிறிது காலத்திற்கு பிறகு உப்பாக மாறுதல்
4 தண்ணீரை ஊற்றி அசுத்தம் அகளும் வரை கழுவுதல், தண்ணீரை இறைத்து சுத்தப்படுத்தல். அசுத்தத்தின் நிறம், சுவை, வாசம் அற்றுப் போகும் வரை..
5 சுத்தப்படுத்துவதில் அசல் தண்ணீர்தான். தண்ணீருடைய நிலைக்கு வேறொன்றும் சமனாகாது. சுத்தப்படுதுவதற்கு தண்ணீர் அல்லாத வேறொன்றுக்கு தெளிவான் ஆதாரம் இல்லாத வரையில்.
6 நாய் பாத்திரத்தினுல் வாய்விட்டுக் குடித்தால் ஏழு முறை அல்லது எட்டு முறை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். அதில் ஒரு முறை மண் போட்டு கழுவ வேண்டும். 
 

இயற்கைத் தேவையை பூர்த்தி செய்தல்

1. பூமியை நெருங்கும் வரை தன்னை மறைத்துக் கொள்ளல்.
2. மக்களை விட்டு தூரமாகுதல் அல்லது மறைக்கப்பட்ட இடத்தில் நிறைவேற்றல்.
3. பேச்சை விட்டு விடுதல்.
4. சங்கையான விடயங்களை தவிர்ந்து கொள்ளல்.
5. மார்க்கமோ சமூக வழமையோ ஒன்றை தடுத்து இருந்தால் அவ்விடத்தில் நிறைவேற்றக் கூடாது. மக்கள் இருக்கின்ற இடங்கள், மர நிழல், வீதிகள் போன்றவற்றில் இயற்கைத் தேவையை நிறைவேற்றக் கூடாது என்று மார்க்கம் சொல்கின்றது.
6. நிறைவேற்றும் போது கிப்லாவை முன்னோக்குதல் பின்னோக்குதல் கூடாது.
7. தண்ணீரால் சுத்தப்படுத்துதல் அல்லது கற்களைக் கொண்டு மூன்று முறை சுத்தப்படுத்துதல். கற்களுடைய நிலையில் எதுவெல்லாம் உள்ளனவோ அவற்றைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம்.
8. போகும் பொழுதும் வரும் பொழுதும் துஆவை ஓதிக் கொள்வது சுன்னா