4 Sept 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 08

 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)

🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠


ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 

மரணம் : ஹிஜ்ரி 1250 

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 

தொடர் : 08


தங்கம் வெள்ளியுடைய ஸகாத்

*************************************

•தங்கத்திலோ வெள்ளியிலோ ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டால் பத்தில் ஒன்றில் கால்வாசில் ஒன்றில் கால்வாசில் ஒன்று கொடுக்க வேண்டும். அதாவது 2.5% சதவீதமாகும். அது அதனுடைய நிஸாபை(எல்லையை) அடையும் பட்சத்தில்.


•தங்கத்தினுடைய நிஸாப் 20 தீனாராகும். அதாவது 10.5 பவுன் அல்லது 85 கிராம் எனும் அன்னலவான எடுகோளை எடுக்கலாம். 


•வெள்ளியுடைய நிஸாப் 200 திர்ஹமாகும். அதாவது 595 கிராமாகும். இதற்கு குறைய ஸகாத் கிடையாது. 


•இது அல்லாமல் உள்ள எந்தவித ஆபரணங்களுக்கும் ஸகாத் கிடையாது.


•வியாபாரப் பொருட்களில் ஸகாத் கடமை இல்லை. (வியாபாரப் பொருட்களுக்கும் ஸகாத் கடமை என்பதுதான் சரியான கருத்து) 


தாவர விளைச்சல்களுடைய ஸகாத் 

*******************************************


•பத்தில் ஒன்று (10% சதவீதம்) ஸகாத் கொடுக்க வேண்டும். 


•தொலிக் கோதுமை, வாட் கோதுமை, சோலகம், பேரீத்தம் பழம், திராட்சை என்பவற்றில் கடமையாகும். பத்தில் ஒன்று என்பது மழை நீரினால் விளைச்சல் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். 


•உரிமையாளரின் சொந்த உழைப்பில் நீர் பாய்ச்சி விளைந்திருந்தால் பத்தில் ஒன்றில் அறைவாசி (5% சதவீதம்) கடமையாகும். 


•இதனுடைய நிஸாப் 5 வஸக்குகளாகும். 1 வஸக் 60 ஸாவாகும். 1 ஸா 2.5 கிலோ கிராமாகும். ஆக 5 வஸக்குகள் என்பது 750 கிலோ கிராமாகும். 


•இது தவிர வேறு எந்த தாவர விளைச்சல்களிலும் ஸகாத் கடமை இல்லை. 


•தேனில் பத்தில் ஒரு பங்கு (10% சதவீதம்) ஸகாத் கொடுக்க வேண்டும். 72 கிலோ கிராம் நிஸாபை அடைந்தால்.


ஸகாத்துடைய பொதுவான அடிப்படைகள் 

**************************************************

•ஸகாத்தை அவசரப்படுத்திக் கொடுப்பது கூடும்.


•ஆட்சியாளர் அந்தந்த பிரதேசத்தில் எடுக்கப்பட்ட ஸகாத்தை அந்த பிரதேசத்திலே பகிர்ந்தளித்தல் வேண்டும். 


•ஆட்சியாளர் அநியாயக் காரராக இருந்தாலும் உரிய ஸகாத்தை ஒப்படைத்து விட்டால் அவருடைய கடமை முடிந்து விடும். 


ஸகாத் பெற தகுதியானவர்கள் / தகுதியற்றவர்கள்

*************************************************************

•8 கூட்டத்தினர் ஸகாத் பெற தகுதியானவர்களாவர். பரம ஏழைகள், ஏழைகள், இஸ்லாமிய ஆட்சியில் ஸகாத் வசூலிப்பதற்காக உழைப்பவர்கள், இஸ்லாத்தை நேசிப்பவர்கள் / இஸ்லாத்தை ஆதரவு வைப்பவர்கள், அடிமைகள், கடனாளிகள், அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர்கள், வழிப்போக்கர்கள்.


•நபி (ஸல்) அவர்களின் பரம்பரையினர் அவர்களால் அடிமை விடப்பட்டவர்கள் ஸகாத் பெற தகுதியற்றவர்களாவர். 


•பணக்காரர்கள், நல்ல முறையில் உழைத்து வருமானம் ஈட்ட முடிந்தவர்களும் ஸகாத் பெற தகுதியற்றவர்களாவர். 


ஸதகத்துல் பித்ர் (பெருநாள் தர்மம்) 

******************************************

•இதனுடைய அளவு 1 சாவாகும். (1 சா என்பது  2.5 கிலோ கிராமாகும்) 


•ஒவ்வொரு அங்கத்தினவர்களுக்கும் இது கடமையாகும். 


•அடிமைக்கு எஜமானும், குழந்தைகள் சிறுவர்களுக்கு அவர்களின் பொறுப்புதாரிகளும் கொடுக்க வேண்டும். 


•பெருநாள் தொழுவதற்கு முன் கொடுத்தாக வேண்டும். 


•அன்றைய தினம் சாப்பிடுவதற்கு எதுவுமில்லாதவர்கள் அல்லது அதற்கு போதுமான வசதியற்றவர்கள் அல்லது வேலைக்கு மட்டும் சாப்பிடுவதற்கு தேவையான வசதியைக் கொண்டவர்களுக்கு கடமை இல்லை. 


•ஸகாத் பெற தகுதியான 8 கூட்டத்தினருக்கும் இதனை வழங்கலாம். 


ஐந்தில் ஒன்று (20% சதவீதம்)  கொடுக்க வேண்டிய கட்டங்கள்

*************************************************************************


•யுத்த களத்தில் விடப்பட்ட கனீமத் சொத்துக்கள் 


•நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட புதையல். புதையல் தவிர நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட எந்தப் பொருளிலும் கடமை இல்லை.

1 Sept 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 07


 துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)


ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 

மரணம் : ஹிஜ்ரி 1250 

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 

தொடர் : 07


ஸகாத்

✴✴✴✴


பின்வருகின்ற சொத்துக்களில் ஸகாத் கடமையாகும் அதற்கு உரிமையாளர் கடமையாகின்ற குழுவில் இருந்தால்..


கால் நடைகள்

ஒட்டகம், மாடு, ஆடு


ஒட்டகத்தின் ஸகாத்

*********************** 

• 5 ஒட்டகங்கள் இருந்தால் ஒரு வருடம் பூர்தியான 1 ஆடு ஸகாத் கடமையாகும்.


• பின்னர் ஒவ்வொரு ஐந்திலும் 1 ஆடு கடமையாகும் (உ+ம் 10 ஒட்டகங்கள் = 2 ஆடுகள்) 


• 25ஐ அடைந்தால் ஒரு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் அல்லது இரண்டு வருடம் பூர்த்தியான 1 ஆண் ஒட்டகம் கடமையாகும். 35 வரைக்கும் இதுதான் கணக்காகும் ( உ+ம் 20 ஒட்டகங்கள் = 4 ஆடுகள், 34 ஒட்டகங்கள் = ஒரு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் அல்லது இரண்டு வருடம் பூர்த்தியான 1 ஆண் ஒட்டகம் ) 


• 36 ஆகிவிட்டால் இரண்டு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். 45 வரைக்கும் இதே கணக்குதான். (உ+ம் 45 ஒட்டகங்கள் = இரண்டு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம்) 


• 46 ஆகிவிட்டால் மூன்று வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். 60 வரைக்கும் இதே கணக்குதான். 


• 61 ஆகிவிட்டால் நான்கு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். 75 வரைக்கும் இதே கணக்குதான். 


• 76 ஆகிவிட்டால் இரண்டு வருடம் பூர்த்தியான 2 பெண் ஒட்டகங்கள் கடமையாகும். 90 வரைக்கும் இதே கணக்குதான். 


• 91 ஆகிவிட்டால் மூன்று வருடம் பூர்த்தியான 2 பெண் ஒட்டகங்கள் கடமையாகும். 120 வரைக்கும் இதே கணக்குதான். 


• 120ஐ தாண்டிவிட்டால் ஒவ்வொரு நாற்பதிலும் இரண்டு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். ஒவ்வொரு ஐம்பதிலும் மூன்று வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். (உ+ம் 150 ஒட்டகங்கள் = மூன்று வருடம் பூர்த்தியான 3 பெண் ஒட்டகங்கள், 200 ஒட்டகங்கள் = இரண்டு வருடம் பூர்த்தியான 4 பெண் ஒட்டகங்கள் அல்லது மூன்று வருடம் பூர்த்தியான 5 பெண் ஒட்டகங்கள்) 


மாட்டுடைய ஸகாத்

***********************

ஒவ்வொரு 30 மாடுகளிலும் ஒரு வருடம் பூர்த்தியான 1 பெண் கன்றோ அல்லது 1 ஆண் கன்றோ கடமையாகும். (உ+ம் 60 மாடுகள் = ஒரு வருடம் பூர்த்தியான 2 கன்றுகள், 44 மாடுகள் = ஒரு வருடம் பூர்த்தியான 1 கன்று)


ஒவ்வொரு 40 மாடுகளிலும் இரண்டு வருடம் பூர்த்தியான 1 பெண் மாடோ 1 ஆண் மாடோ கடமையாகும். பின்னர் இதன் படியே கடமையாகும். (உ+ம் 70 மாடுகள் = ஒரு வருடம் பூர்த்தியான 2 கன்றுகள், 100 மாடுகள் = இரண்டு வருடம் பூர்த்தியான 2 மாடுகள் அல்லது ஒரு வருடம் பூர்த்தியான 3 கன்றுகள்)


ஆட்டுடைய ஸகாத்

**********************

40 ஆடுகள் இருந்தால் 1 ஆடு கடமையாகும். 120 வரைக்கும் இதே கணக்குதான். (உ+ம் 119 / 120 ஆடுகள் = 1 ஆடு)


121 ஆகிவிட்டால் 2 ஆடுகள் கடமையாகும். 200 வரைக்கும் இதே கணக்குதான். ( உ+ம் 119 / 200 ஆடுகள் = 2 ஆடுகள்) 


201 ஆகிவிட்டால் 3 ஆடுகள் கடமையாகும். 300 வரைக்கும் இதே கணக்குதான். 


301 ஆகிவிட்டால் 4 ஆடுகள் கடமையாகும். பின்னர் ஒவ்வொரு 100 ஆடுகளிலும் 1 ஆடு கடமையாகும். (399 வரைக்கும் 3 ஆடுகள்தான் என்பது பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்) 


சேர்ந்திருப்பதை பிரிக்கக் கூடாது பிரிந்திருந்த்தை சேர்க்கக் கூடாது. 


கடமையானதற்கு குறைய எதிலும் ஸகாத் இல்லை.


கூட்டாக செயற்படும் போது ஸகாத் கொடுக்கப்பட்ட பெருமதியை அதற்கேற்றாற் போல் பிரித்துக் கொள்ளல் வேண்டும். 


நோயுள்ள, அங்கக் குறையுள்ள, சின்னதாக மெலிந்த, குட்டி ஈன்றாதவைகளை ஸகாத் கொடுக்கக் கூடாது. உரிமையாளரிடமிருந்து அவர் நன்கு பராமரித்து விருப்பமாக வளர்த்து வந்ததை எடுக்கக் கூடாது