8 Sept 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 09

 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷


ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 

மரணம் : ஹிஜ்ரி 1250 

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 

தொடர் : 09


நோன்பு

⚪⚪⚪⚪


• நம்பிக்கையான, நேர்மையான முஸ்லிம் பிறையைக் கண்டால் ரமழான் நோன்பு பிடிப்பது வாஜிப். அல்லது ஷஃபான் முப்பதாக பூர்த்தியாகிவிட்டாலும் ரமழான் நோன்பு பிடிப்பது வாஜிப்.


• 30 நாட்கள் ரமழானில் நோன்பு நோற்க வேண்டும். 30ஆவது இறவில் பிறை தென்பட்டாலே தவிர. 


• ஒரு ஊரிலே பிறை கண்டால் அந்த ஊருடைய உதயத்திற்கு ஒத்த ஊர்கள் அனைத்தும் நோன்பு வைக்க வேண்டும். 


• நோன்பு பிடிக்கின்றவர் பஜ்ருக்கு முன்னரே நிய்யத் வைத்தல் வேண்டும்.  


நோன்பை முறிக்கக் கூடிய விடயங்கள் 

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹


• சாப்பிடுவது 

• குடிப்பது 

• கணவன் மனைவி உறவு கொள்வது 

• தேவையேற்பட்டு வலிந்து வாந்தி எடுத்தல்


o தொடர்சியாக நோன்பு நேற்றல் கூடாது ( சஹரிலிருந்து அடுத்த நாள் மஃரிப் வரை அல்லது அதற்கடுத்த நாள் மஃரிப் வரை தொடர்தல்) 


o கணவன் மனைவி உறவு மூலம் யார் நோன்பை முறித்து விட்டாரோ அவர் லிஹாருடைய குற்றப் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும். ( வேண்டுமென்று அல்லாமல் மறதியினால் அல்லது உணர்ச்சி மேலீட்டால் கணவன் மனைவி உறவு ஏற்பட்டால் ஓர் அடிமையை உரிமை விடல் வேண்டும் அல்லது தொடர்ச்சியாக விடாமல் 60 நாட்கள்  நோன்பு நோற்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்) 


o நோன்பு திறத்தலை அவசரப்படுத்துதலும் சஹரை பிற்படுத்துதலும் சிறந்தது. 


o மார்க்க ரீதியான காரணங்களுக்காக ஒருவர் நோன்பை விட்டால் அவர் கழா செய்ய வேண்டும். 


o பிரயாணிக்கு நோன்பை விடுவது சலுகை வழங்கப்பட்டிருக்கிறது


o யுத்த களத்தில் அல்லது பிரயாணத்தில் ஒருவர் அழிவை பயந்தால் அவர் நோன்பை விடுவது வாஜிப். 


o நோன்பு கடமையான நிலையில் ஒருவர் மரணித்தால் அவருடைய பொறுப்பாளர் அவர் சார்பாக நோன்பு வைக்க வேண்டும். (நேர்ச்சை நோன்பாக இருந்தால்தான் பொறுப்பாளர் நோன்பு வைக்க முடியுமே தவிர ரமழானுடைய கழா நோன்புக்காக அல்ல. ரமழானுடைய கழா நோன்புக்காக பொறுப்பாளர்கள் விட்ட நோன்புக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்) 


o வயதாகி முதிர்ந்து போய் நிரந்தர நோயாளியாக நோன்பை பிடிக்க முடியாதவர்கள் ( நிரந்தரமாக கழா செய்யவும் முடியாதவர்கள்) விட்ட ஒரு நோன்பிற்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளித்தல் வேண்டும். 


o சுன்னத்தான நோன்பை பொறுத்தவரை அவர் விரும்பினால் விடலாம் அல்லது தொடரலாம். கழாவும் கிடையாது குற்றப் பரிகாரமும் கிடையாது. 


சுன்னத்தான நோன்புகள்

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹


• ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு பிடித்தல். (ஷவ்வாலுடைய ஆரம்பத்திலிருந்து தொடர்தேர்ச்சியாக  பிடிக்க வேண்டும் என்பதல்ல. ஷவ்வால் மாதத்திற்குள் பிடிக்க வேண்டும்) 


• துல் ஹிஜ்ஜாவுடைய ஒன்பதாவது நாள் அறபா தின நோன்பு பிடித்தல்.


• முஹர்ரம் மாதத்தில் நோன்பு பிடித்தல் 


• ஷஃபான் மாதத்தில் நோன்பு பிடித்தல் 


• திங்கள், வியாழன் நேன்பு வைத்தல்


• ஐயாமுல் பீலுடைய நாட்களில் நோன்பு பிடித்தல். (மாதத்தில் வெள்ளை நாட்கள் என்று சொல்லக்கூடிய 13,14,15 நாட்கள்; இது அல்லாமல் மாதத்தில் 3 நாட்கள் பிடிப்பதும் சிறந்தது) 


• சுன்னத்து நேன்புகளிலே சிறந்தது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு பிடிப்பதாகும். 


o காலம் முழுதாக நோன்பு பிடிப்பது வெறுக்கத்தக்கது. 


o சனிக்கிழமை தனியாகவோ அல்லது வெள்ளிக்கிழமை தனியாகவோ நோன்பு பிடித்தல் கூடாது. (தொடர்ந்து ஒருவர் ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது சிறப்பாக்கப்பட்ட சுன்னத்தான நோன்புகளையோ பிடிப்பதாக இருந்தால் அவர் இந்த சட்டத்திற்குள் வரமாட்டார் விரும்பி தேர்ந்தெடுத்துப் பிடிப்பதையே  குறிக்கும்) 


o பெருநாள் தினத்தில் நோன்பு பிடிப்பது கூடாது. 


o ஐயாமுத் தஷ்ரீக்குடைய அதாவது துல்ஹிஜ்ஜாவுடைய 11,12,13 நாட்களில் நோன்பு பிடித்தல் கூடாது. (தமத்துஃ ஹஜ் செய்தவர் குர்பான் கொடுக்க வசதி இல்லாவிட்டால் அவர் வைக்க வேண்டிய பத்து நோன்பில் மக்காவில் வைத்து பிடிக்க வேண்டிய மூன்று நேன்புகளில் இந்த மூன்று நாட்கள் விதிவிலக்காகும்) 


o ரமழானுக்கு முந்திய நாளும் அதற்கு முந்திய நாளும் நேன்பு வைக்கக் கூடாது.